- Monday
- August 24th, 2026
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நேற்றையதினம் (26.11.2023) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வுகள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின்...
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம்...
முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் 3 மணி அளவில் குறித்த பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ”கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சியானது நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமானது வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ”கார்த்திகை வாசம்” என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சிவிகே சிவஞானத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக அரசியற் செயற்பாட்டாளர்...
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23) மர்ம நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், தனது மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு வீடொன்றுக்கு விசாரணை மேற்கொள்ளச்சென்றுள்ள நிலையிலேயே அவரது மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ வைத்தவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில்...
வடமராட்சி – நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மண்டபத்தில் மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகைதரும் மக்கள் மாவீரர்களுக்கு மலர்தூபி அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் காணக்கூடியதாக உள்ளது. குறித்த மண்டபத்தில் மாவீரர் வார இறுதி நாளான நவம்பர் 27 வரை அஞ்சலி...
நாவற்குழி பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வசித்து வரும் நபரொருவர் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளை, தனது காணிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது குறித்த காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து காணி உரிமையாளரால் இது குறித்து பொலிஸ் நிலையத்தில்...
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு இலக்கம் SC/FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு இலக்கம் SC/FR/254/2023 மனுதாரர்களினால் மீள பெறப்பட்டது. அதன்படி, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இந்த...
யாழில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞர் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ,...
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பலத்த மின்னலுடனும் இடிமுழக்கத்துடனும் கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்தி மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன்...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த...
”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...
உள்ளுர் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட முந்தைய வர்த்தமானி அறிவித்தல், இதன் மூலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத 1 கிலோ...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் வழங்குவார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக இலங்கை...
அலெக்ஸின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடடிவக்கைகளை எடுப்போம் என ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞனின் மரணம் குறித்தான கண்ணீர்...
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி மும்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில் மட்டும் கற்கை நடத்தப்பட்டு வருகின்றது, ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும்...
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ஜெனரத் தெரிவித்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகந்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைது...
மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதேவேளை...
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்றின் விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்துள்ளனர். இந்நிலையில் தனது நண்பனுடன் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் இருவரையும்...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட எழுவைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒழுங்காக வருகை தருவதில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, சுமார் 700 பேர் வசிக்கும் அடிப்படை வசதிகள் அற்ற குடும்பங்கள் வாழ்ந்து வரும் தீவுப் பிரதேசமாக எழுவைதீவு விளங்குகிறது. குறித்த பிரதேசத்தில் வெளிநாட்டில் வசிக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
