Ad Widget

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு : அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!

023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கிணங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாற்றுத் திகதிகளை அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா காலத்தின்போது, உயர்த்தரப் பரீட்சைகள், சாதாரணத்தரப் பரீட்சைகள், புலமைப்பரிசில் பரீட்சைகள் காலந்தாழ்த்தி நடத்தப்பட்டதோடு, பரீட்சை முடிவுகளை வெளியிடவும் தாமதம் ஏற்பட்டது.

அத்தோடு, பொருளாதார நெருக்கடி, போராட்டங்களினாலும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தன.

இதனால், மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால், 2024 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சாதரண தரப் பரீட்சையை 2024 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் பெறபேறுகள் 2024 ஜூலை இல் வெளியிடப்பட்டால், பெறுபேறுகள் வெளியான பின்னர், 2024 ஆம் ஆண்டுக்கான உயர் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இது போன்ற கூடுதல் காலம் வழங்கப்பட வேண்டும்.

அப்படியானால், 2024 உயர் தரப் பரீட்சையை 2024 டிசம்பர் அல்லது 2025, ஜனவரி வரை தாமதமாகும்.

அதற்கேற்ப, தற்போதைய கல்விமுறையின் பின்தங்கிய நிலையை சரிசெய்வது மேலும் தாமதமாகும்.

எனவே, உயர்த்தரப் பரீட்சை காலந்தாழ்த்தப்பட்டாலும் புதிய திகதி குறித்து அறிவிக்கும் உரிமை பரீட்சைகள் ஆணையாளருக்கே உள்ளது.

அவர், இதுதொடர்பாக அடுத்தவாரம் அறிவிப்பார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts