வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அரச வங்கியில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திருட முயன்ற குற்றச்சாட்டில், கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் கரவிட்ட பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர்.
இந்த சார்ஜென்ட் மேலும் இரு உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து போலி கையெழுத்திட்டு மற்றொருவரின் கணக்கில் இருந்து பணத்தை திருட முயன்றதாக கூறப்படுகிறது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதன் காரணமாக வங்கி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.