அமெரிக்க பிரஜையிடம் இருந்து 300 அமெரிக்க டொலர்களை சூறையாடிய இளைஞர்கள்!

கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை 2 இளைஞர்கள் பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க பிரஜை கோண்டாவில் பகுதியில் பயணித்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் அவரிடம்...

எச்சரிக்கையை மீறிய விடுதி மீதும் உரிமையாளர் மீதும் ஆவா குழு தாக்குதல்!!

கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுவக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு அந்த விடுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று உரிமையாளர் மீது வாளால் வெட்டியதுடன், விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் கையில் காயமடைந்துள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியில்...
Ad Widget

நியமனம் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகள்!

பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தில் 51 பேர் தமது கட­மை­க­ளைப் பொறுப்பேற்கவில்லை என வவு­னியா மாவட்­டச் செய­லாளர் தெரி­வித்­துள்­ளார். நாடு முழுவதும் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் நிய­ம­னத்­தில் இரண்­டாம் கட்ட­மாக கடந்த முத­லாம் திகதி 16 ஆயி­ரத்து 800 பேருக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன. அதில் வவு­னியா மாவட்­டத்­தில் 199 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவர்க­ளில் 197...

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – நாமல் ராஜபக்ச

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மை பற்றி விமர்சிக்க அவர்களிற்கு என்ன தகுதி உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் இன்று நாமல்...

நல்லூர் திருவிழா –அடியவர்களை சோதனைக்குட்படுத்த 12 சோதனைக் கூடங்கள் தயார்!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆராய்ந்தனர். அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 லட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக...

அரச பணியிலிருந்து கொண்டு இன்று நியமனம் பெற இருந்த 104 பட்டதாரிகள் சிக்கினர்!!

ஏற்கனவே அரச பணியிலிருந்துகொண்டு வேலையற்ற பட்டதாரிகளிற்கான நியமனத்தில் உள்வாங்கப்பட்ட 104 பேர் நேற்றுவரையில் இனம்கானப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் தகவலை மறைத்து நியமனம் பெற முயற்சித்நமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலையில்லாப் பட்டதாரிகளிற்கான நியமனம் தற்போது வழங்கப்படும் நிலையில் இன்னமும் ஆயிரக் கணக்கான பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையில் ஏற்கனவே...

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த நபர் கொடிகாமம் பகுதியில் மது போதையில் தொடருந்து தண்டவாளத்தில் படுத்திருந்த காரணத்தினாலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது உயிரை மாய்த்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

ஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் நேற்று (வியாழக்கிழமை) மூன்றாம் திருவிழா நடைபெற்றது. இதன்போது மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் ஓடினர். குளவிகள் பலருக்கும் கொட்டிய...

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸில் மதுபோதையில் சாரதி, நடத்துனர்!! அச்சத்துடன் பயணித்த பயணிகள்!!

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் மதுபோதையில் இருந்தமையால் பஸ்ஸில் பயணித்தோர் அச்சத்துடன் பயணித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது; யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட இ.போ.ச. பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் மதுபோதையில் இருந்துள்ளனர். நடத்துனர் பஸ் கட்டணத்தை...

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்!!

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி ஐயாத்துரை என்ற வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும்...

வடக்கை வாட்டும் வரட்சி! குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்!!

வடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் காலநிலை காரணமாக பெரும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குளங்களில் நீர்மட்டங்கள் குறைந்து வருகின்றது. வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து மிதக்கும் காட்சி பார்க்கும் மக்களை பெரும் பதைபதைக்கு...

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான வீதி காணமல் போய் உள்ளது!!

சிட்டிசன் என்று ஒரு தமிழ்த் திரைப்படம் அந்த திரைப்படத்தில் அத்திப்பெட்டி என்று ஒரு கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போனது போலான ஒரு சம்பவம் இங்கும் அதுவும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. யாழ்.மாநகர சபை வீதிகளின் பதிவேடுகளின் பிரகாரம் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான வீதி ஒன்று காணமல் போய் உள்ளது. ஜிம்மா...

அதிபர் திட்டியதில் மயக்கமுற்ற ஆசிரியை வைத்தியசாலையில்

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார். இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை...

வீதியில் சென்ற மாணவர்களை மோதித் தள்ளிய ஓட்டோ!!! சாரதியை தப்பிக்க வைக்கும் முயற்சியில் பொலிஸார்??

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட ஐவரை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டிச் சாரதி, வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டனர். அதனால் மாணவர்கள்...

மட்டக்களப்பில் கிறிஸ்தவ சபை பகுதியில் பதற்றம்!!!

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபை பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கிறிஸ்தவ சபையினர் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடங்களாக உள்ளே வைத்துள்ளதாக தெரிவித்தும் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரியும் தாய் ஒருவர் குறித்த சபைக்கு முன்பாக போராட்டம் நடாத்தினார். இதன்போது குறித்த தாயை...

மருதனார்மட ஆலயத்தில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லீம்?

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லிம் இனத்தவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2016 – 2017 காலப்பகுதியில் மருதனார்மடம் இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் பிரதீப சர்மா என்ற பெயரில் பூஜை செய்தவர் கெக்கிராவையைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் முகமட்...

யாழ் மக்களுக்கு பொலிஸா் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!!

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும்...

யாழில் 7வயது மாணவன் உயிரிழப்பு – முட்டை விஷமானதா காரணம்?

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவன் ஒருவன், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த மாணவனும் அவனது...

வரணி சிமிழ் கண்ணகி ஆலயத்தில் சத்தியாக்கிரகம்!

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அனைத்து சமூக மக்களிற்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த போராட்டத்தில், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டு, தமது ஆதரவை தெரிவித்துள்ளார். ஆலயத்தின் திருவிழாவில் ஒரு...

14 முஸ்லிம்களின் உயிரை போராடி காப்பாற்றி இலங்கையில் கதாநாயகியாக மாறிய சிங்கள பெண்!

கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற பெண்ணே இந்த வீரச் செயலை செய்துள்ளார். கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தில் 500க்கு அதிகமான...
Loading posts...

All posts loaded

No more posts