- Saturday
- August 23rd, 2025

கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றையதினம் 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது....

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு...

நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. மத்தியம் 2.30 மணியளவில் அவ் அமர்வு முடிவடைந்து உறுப்பினர்கள் வெளியேறும் போது யாழ்.மாநகர சபையின் பிரதான் வாசலுக்கு அருகில் ஒரு விபத்து நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் தலைப்பகுதியில் அடிபட்டு இரத்தம் வெளியேறிய...

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இன்று (புதன்கிழமை) தகவல் வெளியாகியிருந்தது....

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று (புதன்கிழமை)...

முதியவர் உயிரிழப்பை அடுத்து மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அச்சுவேலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது. வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில் கூடிய முதியவரின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரைத்...

யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனமாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை கணக்கிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டப அடிக்கல் விழாவிற்கான செலவீனத்தை மாநகர சபை ஏற்றுக்பொள்வது தொடர்பில் மாநகர சபைநில் சர்ச்சை ஏற்பட்ட சமயம் அடிக்கல் நாட்டுவிழாவுடன் பணி நிறுத்தப்பட்டால்...

தெல்லிப்பளையில் விமான நிலைய குறிகாட்டும் பெயர் பலகை, சிக்கல் நிலையால் பொலித்தீனால் மூடப்பட்டுள்ளது. விமானப்படையினரின் முட்கம்பி வேலிக்குள் உள்ள 400 மீற்றர் வீதி சிக்கல் காரணமாக யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் வீதி என தெல்லிப்பளை சந்தியில் குறிப்பிடப்பட்ட பெயர் பொலித்தீனால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்வதற்கான பிரதான வீதியான தெல்லிப்பளை சந்தியில்...

தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறுவோர் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச கரும மொழிகள்...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்....

தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்த போதும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. நல்லூரில் தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுக்கு வசதியாக யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தூபிக்கு முன்பாக...

யாழ்ப்பாணம் நகரில் வீடொன்றுக்குள் கொள்ளையிடும் நோக்குடன் நுழைந்திருப்பார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் வீழ்ந்த சத்தம் கேட்டதையடுத்து கிணற்றைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாரை அழைத்துவரச் சென்றுள்ளார். எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்...

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கம் மரங்கள் வனவளத் திணைக்களத்தால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பயன் தரும் தேக்கம் மரங்கள் நடப்பட்டன. அவை வனவளத் திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. நேற்று காலை முதல்...

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்குண்டுதால் மனைவி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் அவரை ஏற்றிச் சென்ற கணவரை நடுவீதியில் வைத்து வட்டுக்கோட்டை காவற்துறையினர் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டையிலிருந்து மனைவியை ஏற்றிக்கொண்டு இளம் குடும்பத்தலைவர் சித்தன்கேணிக்கு பயணித்துள்ளார். சங்கரத்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டு மனைவி...

வடக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திடம் பல கோடி ரூபா நிதியை மோசடி செய்த முக்கியஸ்தர் ஒருவர் உள்பட இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் இலங்கையில் தலைமறைவாகி உள்ளதாக அவர்களிடம் உதவித் திட்ட நிதியை வழங்கிய நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை...

அரச வேலை பெற்றுத்தருவதாக இளம் பெண்களிடம் சேட்டை செய்த வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிக்கினார்!!
அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார். வலி. மேற்கு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்...

திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி சென்றுள்ளனர். மானிப்பாய் கொத்துக்கலட்டி பகுதியில்...

கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை 2 இளைஞர்கள் பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க பிரஜை கோண்டாவில் பகுதியில் பயணித்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் அவரிடம்...

கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுவக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு அந்த விடுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று உரிமையாளர் மீது வாளால் வெட்டியதுடன், விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் கையில் காயமடைந்துள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியில்...

பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் 51 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என வவுனியா மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த முதலாம் திகதி 16 ஆயிரத்து 800 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வவுனியா மாவட்டத்தில் 199 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் 197...

All posts loaded
No more posts