- Saturday
- August 23rd, 2025

வவுனியா மாவட்டம் – கோதண்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கோபு என்றழைக்கப்படும் இலங்கைநாதன் இளங்கோவன் (வயது – 31) என்ற குறித்த முன்னாள் போராளி, தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொலையா,...

கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்னால், வீமானப்படையினரால் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகையில், “விமானப்படையின் காணி, அதனை மீறி உட்சென்றால் சுடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை (18) இரவோடிரவாக அந்த அறிவித்தல் பலகை மாற்றப்பட்டு, “இது விமானப்படையின் காணி,தேவையில்லாமல் உட் செல்லத் தடை” என்றும் எழுதப்பட்டு புதிய அறிவித்தல் பலகையொன்று போடப்பட்டுள்ளது.

'ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்" என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில், ஜனநாயக வழிகளில் அரசாங்கப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட...

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் மற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என மனத உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விடயத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய பணிப்பாளர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்னமும்...

திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது "ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது...

கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்த விதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை...

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ கட்சிகள் தமது தலைமையை நிராகரித்து , ஆணித்தரமான முடிவை எடுத்து நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...

வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது எனவும் நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிரைப் போல நீரைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளிலான விசேட வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச சமுகத்திலிருந்து மறைக்கப்பட்டு விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்...

பாகிஸ்தான் போர்ப்படைக் கல்லூரியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தொடர்பாகவும், அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலையங்கத்தில் விரைவுரையொன்றை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பணம் மேற்கொண்டுள்ள கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடந்த புதன்கிழமை லாகூரிலுள்ள பாகிஸ்தான் போர்க் கல்லூரிக்குப் பயணம் செய்திருந்தார். பாகிஸ்தான் கடற்படை...

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய காணிகள் மீண்டும் கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த...

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 524 ஏக்கர் காணிகளை தங்களிடம் கையளிக்க கோரி கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 18ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களின்...

இன்று 18ஆவது நாளாக தமது நிலத்தை மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பிலவுக்குடியிருப்பு மக்களைத் துரத்துவதற்காக விமானப்படையினர் நாய்களை ஏவிவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிலவுக் குடியிருப்பு மக்களின் சிறீலங்கா விமானப்படையினர் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு குறித்த மக்கள் கடந்த 31ஆம் நாளிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...

ஆரம்பத்தில் இருந்த விமான நிலைய எல்லையை தாண்டி, அரசாங்கம் கூறுவதை போன்று ஒரு ஏக்கர் நிலத்தையேனும் மேலதிகமாக சுவீகரிக்க நாம் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...

நேற்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வரும் நிலையில், நேற்று பாடசாலை மாணவர்களும் இப்போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இருப்பினும் அண்மையில்...

சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை தமக்கு மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு, இடைத்தங்கல் முகாம்களை மூடி, மக்களை சொந்த இடங்களுக்கு மீள அனுப்புவதாக முன்னைய அரசாங்கம் ஐ.நா. மன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக பாவனை...

யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சந்திரிக்கா, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள், தமது ஊரிலேயே உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் ஒரு விடயத்தை செய்து...

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என...

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத்...

All posts loaded
No more posts