- Monday
- May 12th, 2025

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பிரபல்யமான பாடசாலைகளில் சேர்த்துகொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள்....

பாடசாலைகளின் தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடைவிதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலை அபிவிருத்திக்காக பழைய மாணவர் சங்கம், வகுப்பு நலன்புரி சங்கம் ஆகியவற்றினூடாக அறவிடப்படும் அனைத்து அறவீடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு...

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை பழைய முறைப்படி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது இதனை கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் பழைய முறைப்படி இரண்டு வினாத்தாள்கள் கொண்டதாக பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசில் கல்வி அமைச்சராக இருந்த பந்துல குணவர்த்தன ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையின்...

இளமாணி ,முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் இந்தியாவில் தொடர்வதற்காக, கலாசார உறவுகளுக்கான இந்தியப்பேரவையின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கையைச்சேர்ந்த 180 பேருக்கு உயர்கல்வி புலமைபரிசில்களை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளில் உயர்கல்வியை தொடர்வதற்காக இவை வழங்கப்படுகின்றன.இலங்கை அரசின் உயர் கல்வி அமைச்சின் ஊடாகவே பயனாளர் தெரிவுகள் இடம்பெறும். இலங்கை அரசின்...

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தால் இளைஞர், யுவதிகளுக்கான விருந்தினர் விடுதி இலவச பயிற்சி நெறிகள் காரைநகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் நிர்வாக தலைவர் பி.யோ.சுந்தரேசன் தெரிவித்தார். யாழிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் வளர்ச்சியானது...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய கற்கை பீடங்கள், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன 600 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சற் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டு இந்த கற்கை பீடங்களை அமைப்பதற்காக வேண்டுகோள்...

அமெரிக்க தகவல் கூடத்தின் ஏற்பாட்டில் ஆங்கில செறிவூட்டல் 4 மாதகால பயிற்சி எதிர்வரும் 22ஆம் திகதி முதல் யாழ்.பொது நூலகத்தில் கற்பிக்கப்படவுள்ளதாக யாழ் அமெரிக்க தகவல் கூட அலுவலகம் புதன்கிழமை (07) தெரிவித்தது. ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இந்த பயிற்சிநெறியில் உயர்கல்வி கற்போரும் பாடசாலையை...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று (07) முதல் எதிர்வரும் 09 ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் 12ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்தது. இதேவேளை புனித பாப்பரசரின் வருகையையொட்டி பாதுகாப்பு கடமை களுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி தெரிவு...

க.பொ.த உயர்தரப் பரீட்சை சிறந்த பெறபேறுகளைப் பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதன்கிழமை (31) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. தேசிய ரீதியில், மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த வடமாகாணத்தை சேர்ந்த 23 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பணப்பரிசும் வழங்கப்பட்டது. கணிதப்பிரிவில் தேசிய...

யாழ். இந்திய துணைத்தூதரக கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய 66 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. கர்நாடக சங்கீதம், வயலின், ஹிந்திமொழி மற்றும் யோகா கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற...

இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார். அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர்...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை முறைக்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற ஹொட்லைன் இலக்கம் அல்லது 0112785211 பொது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வரை...

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி...

இவ்வருடம் 2014ஆம் ஆண்டுக்கான க.பொ.சதாரண தரப்பரீட்சைக்காக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் இன்று புதன்கிழமை (03) நள்ளிரவுடன் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான க.பொ.சாதாரண தர அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பரீட்சாத்திகளுக்கான அனுமதி...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டார். விடைத்தாள்களின் புள்ளிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக அவர் கூறினார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண...

All posts loaded
No more posts