சிறுவர் கழகங்களுக்கிடையிலான நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்

கடந்த வருடம் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நன்னடத்தை திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலமாக நடாத்தப்பட்ட போட்டியில் யாழ் மாவட்டத்தின் சிறுவர் கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இலக்கம் 176, பனிப்புலம், திருநாவுக்கரசு சிறுவர் கழகம்...

இலவச சிங்கள மொழிப்பயிற்சி வகுப்புக்கள்

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுசரணையுடன் ஐக்கிய மொழிச்சங்கம் நடாத்தும் இலவச சிங்களமொழிப் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் தலைவர் வ.சிவச்சந்திரதேவர் தெரிவித்தார். இப்பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 04 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பி.ப 3:00- 5:00 வரை வதிரி கரவெட்டியில் அமைந்துள்ள...
Ad Widget

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2015ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பழைய அமைப்பின் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்களுக்கான ஏற்றுக்கொள்ளும் திகதி முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 - 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும்...

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்!

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்...

18 தேசிய கல்விக்கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

நாட்டிலுள்ள 18 தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான 32 வகையான மூன்றாண்டு கால ஆசிரியர் கல்வி தொடர்பான சேவை முன்தொழிற்பயிற்சிகளைப் பயில்வதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 25 வயதிற்குட்பட்டு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தேவையான இசட் புள்ளிகளைப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 32 வகையான பாடநெறிகளுக்கு தேவையான...

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்தல்

2015ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை (08) அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் மே 25ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

ஆசிரிய கலாசாலை பரீட்சைகளில் சித்தியடையாதோருக்கான மீள்பரீட்சை

2011ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற ஆசிரிய கலாசாலைப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கான, மீள்பரீட்சை ஒன்றை இவ்வருடத்தில் நடத்துவதற்குப் பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலையூடாக ஏற்கெனவே பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைய தவறியவர்கள், நூன சித்தி பெற்றவர்கள் ஆகியோர் மீள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் பொருட்டு எதிர்வரும் 30க்கு முன்னர் கலாசாலை அதிபருடன்...

வடக்கிலிருந்து இந்தியா சென்று கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களை பதிவு செய்யக் கோருகிறது தூதரகம்

வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம். இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது...

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனம்

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் யாழ் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அவற்றின் உட்கட்டுமான அமைப்புக்களை மேம்படுத்தவுள்ளது. சிவில் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை வைக்கப்பட்டு பின்னர்...

5000 மஹாபொல அடுத்த மாதம்: தேர்தல் முறையிலும் மாற்றம்

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது போன்று 5000 ரூபா மஹாபொல புலமை பரிசில் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (07) உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் சட்ட திருத்தம் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். 100 வேலைத் திட்டம்...

வளலாய் அமெரிக்க மிசன் பாடசாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

வளலாய் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வளலாய் மீள்குடியேற்ற சங்கத்தலைவர் செல்லப்பு துரைரட்ணம், புதன்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1990ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் மூடப்பட்ட இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் வளலாய் பகுதி மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை தமது...

வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை முன்னிலை

இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6...

மீள் திருத்தத்துக்கு 24வரை விண்ணப்பிக்கலாம்

வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சென்.ஜோன் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்ப்பாண சென்.ஜோன் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது கல்வி இராஜாங்க அமைச்சு இவ் அனுமதியை வழங்கியுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கான கட்டடத்தை பாடசாலை நிர்வாகம் தனது சொந்த பணத்தில் அமைக்கவுள்ளதுடன் அதற்கான பொருட்களையும் தனது சொந்த நிதியிலே பெறவுள்ளது. இந்த திட்டத்துக்காக 60 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக...

வளங்கள் இல்லையென மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி, கிளிநொச்சி, வேரவில் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் வித்தியாலய முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தங்களுக்கான வளங்கள் இல்லையெனவும் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தேவையெனவும் அவர்கள் வலியுறுத்தினர். பாடசாலை மாணவர்களுடன் பெற்றோர்களும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர். உயர்தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், சித்திரம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள்...

ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏபரல் முதல் வாரத்தில்!

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

உயர்தரத்திற்கு கணித பாடம் அவசியமில்லை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க...

முதல் பல்கலைக்கழகக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பம்

இலங்கையில் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி அமைச்சின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. விரைவில் அது திறந்து வைக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி ஜே. ஜூட் வோல்ட்டன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தியிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த...

சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்குக்கான ஆய்வுகட்டுரைகளை உலகெங்கிருந்தும் கோரும் யாழ் பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினால் இவ்வாண்டும் 'அறிவு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல்' என்னும் தொனிப்பொருளிலான சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வரங்கிற்கான ஆக்கங்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முகாமைத்துவ...
Loading posts...

All posts loaded

No more posts