- Tuesday
- September 15th, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு,வளலாய் பகுதியில் வைத்து சாரதியை தாக்கி, முச்சக்கரவண்டியினை அபகரித்துச் சென்றுள்ளதாக,அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர். வளலாய் பகுதியில் முச்சக்கரவண்டி...
பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 01.00 மணியளவில் குறித்த சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை - கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேருக்கு,...
யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர், பல்கலைக்கு வெளியில் தங்கி தமது கல்வியை...
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய...
வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இரண்டு முறைப்பாடுகளும் காணி தொடர்பான பிரச்சினைகளில் காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஆகும். இதில் ஒரு முறைப்பாடு...
வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்....
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பன்னிரன்டு பேரின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்...
வாள் கொண்டு ஒருவரை வெட்ட முற்பட்ட ஒருவருக்கு, மூவாயிரம் ரூபாய் அபராதமும் 2 மாத கடுழிய சிறைத்தண்டனையும் விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், தீர்ப்பளித்தார். கடந்த வருடம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பத்தகராறு காரணமாக, ஒருவரை குறித்த நபர் வாளால் வெட்ட முற்பட்ட போது, பொலிஸார் கைது செய்திருந்தனர். கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில்...
வவுனியா - மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை குறித்த சிறுமி வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45 யதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை அவரது சகோதரன்...
கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை நேற்று கைது செய்ததாக, இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர்.சேனாநாயக்க தெரிவித்தார். இளவாலை பொலிஸ் புலனாய்வு அதிகரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாதகல் - கல்விளை பகுதியில், சிவில் உடையில் காத்திருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில்...
கொழும்பின் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவங்கள் காரணமாக ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனந்த மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் காரணமாக சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்திலும் சில மாணவர்கள்...
கைலாசப்பிள்ளையார் கோயில் பகுதில் உள்ள கடை ஒன்றின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர், வழமைபோன்று நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை, கடையினைத் திறந்து உள்ளே சென்றபோது,...
டுபாயில் இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. குறித்த இலங்கையர்கள் வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், நபர்கள் மற்றும்...
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பினி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சிகளது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாட்சியப் பதிவுகளானது சாட்சிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நீதிவானது பிரத்தியேக அறையில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த ஏழு மாத கர்ப்பினி பெண்ணொருவர்...
இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் சுமார் 550 பேரை ஒரே நாளில் கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை தொடர்ந்து இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்கள் 550 பேர், ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதி யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவத்தினரில் சுமார் 43000 பேர் தப்பிச் சென்றிருந்ததோடு, அவர்களுக்கான...
சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் 9 பேரின் விளக்கமறியல் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998 ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்றம் குறித்த...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 5பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று பிறப்பித்தார்.
கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து திடீரென கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஐந்துபேரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட ஐந்து முன்னாள் போராளிகளின் வழக்கு விசாரணைகளும் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது. 30 ஆம் திகதி...
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்தி வந்த மூன்று நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த கேரள கஞ்சா கடத்தல் முறியடிப்பு தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தினூடாக பிற மாவட்டமொன்றுக்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக இரகசிய தகவலொன்று கிடைக்கப்பட்டிருந்தது....
யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இராணுவச் சிப்பாய், இராணுவ அதிகாரிகளால் வியாழக்கிழமை (09) இரவு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. படைச் சிப்பாய் அங்குள்ள யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதன் காரணமாக குறித்த யுவதி தற்போது...
Loading posts...
All posts loaded
No more posts
