- Tuesday
- September 15th, 2026
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக மன்றில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு நேற்ற திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் இடம்பெற்றது. அதன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல்...
வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ வீரரின் கைவசமிருந்த 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்....
கிளிநொச்சி - கல்லாறு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை தருமபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீண்ட காலமாக சட்ட விரோதமாக நடைபெற்று வரும் இம் மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியான மகேஸ் வெலிகண்னவுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...
முகமாலைப் பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலமாக தாக்குதல் நடத்திய நபர்களின் தடயப் பொருட்கள் சில கிடைத்துள்ளதுடன்...
வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 8 பேரில் மூவருக்கு 3 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 5 பேருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், மடத்தடியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தையடுத்து 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டனர். அந்த கும்பலுக்கு டில்லு...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி வழக்கின் விசாரணைகள் கொழும்பிற்கு மாற்றப்படுவதற்கு...
சிறுப்பிட்டி ,மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவிசரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு வழியாக உள்நுழைந்த திருடர்களினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது.இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன அவர்களுக்கு கிளிநொச்சி...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கினை கொழும்பிற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ள நிலையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக மாணவர்கள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்கள் படுகொலை வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது, ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இன்று (16) மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு பலியானதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
ஊர்காவற்றுறை கர்ப்பிணி படுகொலை வழக்கு தொடர்பாக, இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு, வெள்ளிக்கிழமை (12) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி,...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கேடுகளை இரும்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, மேற்படி வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில்...
புங்குடுதீவு வித்தியா பாலியல் வன்புணர்வு கொலை வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றிலேயே இடம்பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி புங்குடுதீவு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி புங்குடுதீவு கந்தசாமி கோவிலடியில்...
ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த 17 இளைஞர்கள் பொலிஸாரால் சில மணி நேரம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினர் ஏழாழைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 17 பேரை பிடித்துச் சென்றனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்...
நாகவிகாரை ஓய்வு விடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலப்பதனைக் கண்ட வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அதிர்ச்சி அடைந்ததோடு சட்டத்தை அமுல் செய்ய வேண்டிய மாநகரசபையினரையும் கடிந்துகொண்டார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் மற்றும் குளத்திலிருந்து கடலிற்குச் செல்லும் வடிகால் என்பன ஆளுநரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் , படையினர் , மாநகர சபையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன்...
சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்ற பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள்களால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவத்தில் உணவகத்தின்...
தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து அதனை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிபதி ரி.கருணாகரன் நேற்று வியாழக்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , திருட்டு குற்றம் ஒன்று தொடர்பில் சுன்னாகம் பொலிசாரினால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படின் குறித்த வழக்கை தொடர் விசாரணைகள் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று (05) தெரிவித்தார். இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...
Loading posts...
All posts loaded
No more posts
