- Tuesday
- September 15th, 2026
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ததுடன், மருத்துவ பரிசோதனைக்கு...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர். அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது அந்த இடத்தில், இராஜாங்க...
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்த நபர் இன்று காலை பொலிஸில் சரணடைந்தார். இவர் நல்லூரை சொந்த இடமாக கொண்ட சிவராஜா ஜெயந்தன் 39 வயது இவரிடம் மேற்கொண்ட பொலிஸ்விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கையில், நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்கில் யாழ். பொலிஸ் நிலைய...
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸில் சரண் அடைந்துள்ளார். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா ஜெயந்தன் என்பவரே துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். சம்பவ தினத்தன்று தப்பி ஓடிய குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் காலை அவர் தானாகவே...
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸாரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி, மணற்காட்டுப் பகுதியில் அனுமதியற்ற வகையில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் என்ற...
படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார நேற்று (திங்கட்கிழமை) சாட்சியளித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் வித்தியாவின் படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை நீதாய தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரசபகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள்...
இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபாய் கப்பமாக பெற்ற இளைஞரை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நற்தசேகரன் நேற்று (20) உத்தரவிட்டார். காதலித்த போது பெற்றுக்கொண்ட புகைப்படங்களை உருமாற்றி ஆபாசப் படங்களாக இணையதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி, தன்னிடம் 2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டதாக, பெண்ணொருவர்...
யாழ். ஊர்காவற்துறை மாணவி வித்யா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார். இதன்படி, லலித் ஜயசிங்கவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கான தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை)...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினுள் செல்லும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு முதன்முறையாக நேற்று (வியாழக்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் முறையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குறித்த சாட்சியப்பதிவு இடம்பெற்று வருகின்றது. வழக்கின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள நிலையில்,...
வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில், நள்ளிரவு வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை கடத்த முற்பட்ட 5 இளைஞர்களை, அப்பகுதி மக்கள் பிடித்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை 5 இளைஞர்கள் இணைந்து கடத்த முற்பட்டுள்ளனர். இதன்போது, மாணவியின் தாயார் கூக்குரல் இட்டதால் தாயாரை அவ்விளைஞர்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு, எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேன்முறையீட்டு மனுவை, பரிசீலனைக்கு எடுத்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவுக்கு எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு,...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமாரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தவோ, நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கோ உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் இரண்டாம் கட்ட சாட்சியப்பதிவின் இரண்டாம் நாளான...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பித்துச் செல்ல உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக, ஊர்காவற்துறை நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகஜனை கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் தலைமறைவாக உள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், அவர்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார், யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் நேற்று (18) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் Trial at Bar விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆரம்பமானது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,...
வாள்வெட்டுக்கு இலக்காகிய தபால் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த குணபாலன் வயது 50 என்பவரே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் குறித்த உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுளைந்த மர்ம நபர் ஒருவர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த சமயம்...
நேரியகுளம், மாங்குளம் பகுதியில் குடும்பத்தினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாங்குளத்தை சேர்ந்த 68 வயதுடைய இஸ்மாயில் சம்சுதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இரவு 8 மணியளவில் நேரியகுளம் மாங்குளம் பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவரது வீட்டில் உறவினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது....
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...
இந்திய மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் பெங்களூர் நகரில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாகவும், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 144 போலியான கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் மூவரும் இந்தியாவின் பல இடங்களில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் இவர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
