- Tuesday
- September 15th, 2026
பலாலிபடைத்தலைமயகத்தில் கடமையாற்றிய இராணுவசிப்பாய் காணாமல் போயிருந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரீ 56 ரக துப்பாக்கி வீமான்காமம் பகுதியில் இருந்து நேற்று (11) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தகவல்கள் தெரிவித்திருந்தனர். பலாலிபாதுகாப்பு தலைமையகத்தில் கடந்த 9ம் திகதி இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் காணாமல் போனவிடயம் கடமைக்கு வேறு ஒரு சிப்பாய்...
மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி...
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வைபவம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற முறுகல்நிலை வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறுபேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்....
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய பாலைய்யா சுதாகரன் என்பரரே உயிரிழந்துள்ளார்....
போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு...
மது அருந்திய சாரதிகளின் போதையை பரிசோதிக்கும் 90 ஆயிரம் கருவிகள் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொளள்ப்படும். அவ்வாறான சாரதிகளின் அனுமதி பத்திரங்களை தற்காலிகமாகவேனும் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தி வைக்குமாறு...
ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன்(55) மீது நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன்( வெளிநாட்டு பிரஜை) மற்றும் மாணிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த கௌரிகாந்தன் ஆகியோரே தன் மீது தாக்குதலை மேற்கொண்டதாக பரமேஸ்வரன் யாழ் பொலீஸ் நிலையத்தின் முறைபாடு பதிவு செய்துள்ளாா். இது தொடர்பில் ஊடகவியலாளா் பரமேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட...
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 10.20 மணியளவில் வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அதன்...
உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில், கண்டி-பல்லேகல சர்வதேச மைதானத்தில், கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்துத் தண்ணீர்ப் போத்தல்களை வீசிய, இரசிகர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே, இந்த சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அணியின் வீரர்களை நோக்கி, தண்ணீர்ப்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை கொழும்பிற்கு தப்பிச்செல்ல யாழ். உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உதவினார் என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகஜன் குறித்து பல முக்கிய விடயங்களை நீதிமன்றத்தில் சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த வழக்கின் விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர் யாழ். வேலணை மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார் என வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று...
யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார். இந்நிலையில்,...
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்ப வைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில், கடந்த இரண்டு மாத...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் நகக் கீறல்களுடன் ஒருவர் வெளியில் உள்ளாரென்றும், சட்டவைத்திய அதிகாரிகளை மீள அழைத்து சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிரிகள் தரப்பு வழக்குத் தொடுநர் ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில், எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது. இதன்போது, ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையின்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த வித்தியா கொலை வழக்கின், வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிப் பதிவுகள் கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், மேலதிக...
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வழக்கில் அவர் பிணை வழங்க கோரிக்கை...
டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்...
Loading posts...
All posts loaded
No more posts
