போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சட்டத்தரணி கைது

வீதிப்போக்குவரத்தினை மீறிய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி ஒருவரை சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் அனுமதித்துள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பேஸ்புக்கில் ஆசிரியர்களின் முகங்களை மாற்றி பதிவேற்றம் செய்த மாணவனுக்கு எதிராக விசாரணை!

சமூக வலைத்தளம் பேஸ்புக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முகங்களை மாற்றி அவர்களின் படங்களை பதிவேற்றம் செய்த மாணவனுக்கு எதிராக விசாரணை நடைபெற்றுவருவதாக அந்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வரை ஒத்திவைப்பு!

யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வியாழக்கிழமை வரை யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் திருநாவுக்கரசு ஒத்திவைத்தார். (more…)

போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட இளைஞர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் இளைஞரொருவரை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். (more…)

யாழில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபர் தென்னிலங்கையில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

சட்டவிரோத மின் பாவனையாளர்களெனக் கூறப்படும் 4 பேரை யாழ். பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர். (more…)

ஐ.சி.ஆர்.சி.யின் குறியீட்டை அநாவசியமாக உபயோகிப்பதாக குற்றச்சாட்டு

யாழ். மாவட்டத்தில் உள்ள பலர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) குறியீடான சிவப்பு புள்ளடியை அநாவசியமாக பாவித்து வருவதாகவும் இத்தகைய நடவடிக்கை பிழையான செயல்பாடாகும் எனவும் யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். (more…)

வாளால் வெட்டிய பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக (more…)

திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் கைது

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில், திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று காலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

1,100 பவுண் மோசடி செய்த பெண்கள் இருவருக்கு எதிராக முறைப்பாடு

1,100 பவுணிற்கு மேற்பட்ட தங்க நகைகளை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் இரு பெண்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். (more…)

நாவாந்துறை வாள் வெட்டு சம்பவம்: ஒருவர் கைது

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார். (more…)

அச்சுவேலி பகுதியில் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு

அச்சுவேலிப் பிரசேத்தில் கடந்த பல மாதங்களாக சைக்கிள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். (more…)

திருடர்களுக்கும் பஸ் நடத்துனர்களுக்கும் தொடர்பு! – போக்குவரத்துப் பொலிஸார்

யாழில் போக்குவரத்தில் ஈடுபடும் சில பஸ்களில் நடத்துனர்கள் திருடர்களை செற்பண்ணி திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக யாழ்.போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

குழந்தையுடன் பிச்சையெடுத்த பெண் கைது

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பிச்சையெடுத்த தாயொருவர், யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (more…)

போலி நாணயத்தாளுடன் வங்கி ஊழியர்கள் மூவர் கைது

500 500 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருள் நிரப்ப முயன்ற குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகத்தர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. (more…)

அனுமதிபத்திரம் இல்லாமல் மண் ஏற்றியவர்கள் மாட்டிக்கொண்டனர்

அனுமதி பத்திரம் இன்றி இரண்டு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிகொண்டு வந்த இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதவான் குறித்த இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உதவியுடன் லீசிங் கார் அபகரிப்பு: பொலிஸார் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் லீசிங்க் நிறுவனத்தினர் என்ற பேர்வழியில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. (more…)

இந்திய வியாபாரி யாழில் கைது

சுற்றுலா விஸாவில் வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாடகை வாகனங்களை விற்பனை செய்த இளைஞன் கைது

யாழ்ப்பாணம், பெட்றி வீதி பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு நடபர்களிடம் விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

இளவாலையில் கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது

இளவாலை பொலிஸ் பிரிவில் மாதகல் மேற்கு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts