Ad Widget

ஐ.சி.ஆர்.சி.யின் குறியீட்டை அநாவசியமாக உபயோகிப்பதாக குற்றச்சாட்டு

srilanka_red_cross-ICRCயாழ். மாவட்டத்தில் உள்ள பலர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) குறியீடான சிவப்பு புள்ளடியை அநாவசியமாக பாவித்து வருவதாகவும் இத்தகைய நடவடிக்கை பிழையான செயல்பாடாகும் எனவும் யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பல்வேறு தரப்பினருடன் ஆயுள்வேத வைத்தியாகள் பொதுமக்களும் கூட இத்தகைய செஞ்சிலுவைச் சங்கத்தின் குறியீடான சிவப்பு புள்ளடியை தமது வாகனங்களில் பாவித்து வந்துள்ளார்கள்.

இது ஒரு பிழையான செயலபாடாகும் எனவும் இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு அறிவித்தள்ளதாகவும் தெவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் குறியீட்டை செஞ்சிலுவையுடன் தொடர்புடையவர்கள் தவிர ஏனையவர்கள் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்மை அடையாளப்படுத்துவதாக இருந்தால் மருத்தவ சேவையில் உள்ள வைத்தியாகள் மற்றும் ஏனையவர்கள் பச்சை நிறத்தை உடைய புள்ளடியையும்யும் ஏனைய கால்நடை வைத்தியர்கள் மற்றும் அலுவலர்கள் நீல நிறத்தை உடைய புள்ளடியையும் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts