Ad Widget

நாவாந்துறை வாள் வெட்டு சம்பவம்: ஒருவர் கைது

arrest_1நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாகவே வயோதிபர் ஒருவர் மீது அசிட் வீசப்பட்டதுடன், வாளால் வெட்டிய சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில், அதே இடத்தினைச் சேர்ந்த அப்துல் காதர் முகம்மது அலிம் நிஹார் (வயது 53) என்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட வேளை, சம்பவத்துடன் 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

அதில், ஏனைய நால்வர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அம்பாறை பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், அம்பாறை கெக்கராவ பகுதியில் வைத்தே அம்பாறை பொலிஸாரின் உதவியுடன், பிரதான சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன், அவர் பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி கூறினார்.

அத்துடன், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இவர் நாவாந்துறை பகுதியைச்சேர்ந்தவர் என்றும் விசாரணையின் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts