Ad Widget

பாவனையாளர் முறைப்பாட்டு பிரிவு ஆரம்பம். முறைப்பாட்டு எண்களும் அறிவிப்பு

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. மேற்படி முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பாக புலனாய்வு அதிகாரி மு.றம்ஸீன் அவர்களுடன் புலனாய்வு அதிகாரியான...

வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு

கடந்த யுத்தகால இடம்பெயர்வுகளுக்கு பின்னர், வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகாரசபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு, யாழ். வணிகர் கழகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்...
Ad Widget

சிகரட் மற்றும் மதுபானம் மீதான வரி அதிகரிப்பு

சிகரட், மதுபானம் மற்றும் பாம் ஒயில் போன்றவற்றின் வரியை அதிகரிப்பதற்கும், தனியார் சுகாதார சேவை மீதான வெட் வரி வீதத்தை குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். பொருளாதார குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார். அதன்படி குறித்த...

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி பொலன்னறுவை, வவுனியா போன்ற பிரதேசங்களில் இதுபோன்று அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் ஹசித திலகரட்ன கூறினார். சீமேந்து தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றின்...

சிகரெட் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

சகல வகையான சிகரெட்டுகளின் விலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படகூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சீமெந்தின் விலை உயர்வு

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்தின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் ஆகிய ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 870 ரூபாவாகவுள்ள சீமெந்துப் பக்கற் 930 ரூபாவாக உயர்வடைகின்றது.

முச்சக்கரவண்டிக்குப் பதிலாக குறைந்த விலைக்கு நம்நாட்டில் வாகனம்

முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலையில், நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வழிசமைத்துக்கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாகனம் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன. நான்கு சக்கர வண்டி என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்த போதிலும், அது எவ்வகையான வாகனம் என்று அறிவித்திருக்கவில்லை. இருப்பினும், மிகச் சிறியரக கார் ஒன்று தொடர்பிலேயே அமைச்சர் அறிவித்திருந்தார்...

முச்சக்கரவண்டிக்குப் பதிலாக கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது!

முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் முச்சக்கரவண்டியினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே அதற்குப் பதிலாக சிறிய ரக கார்களை இறக்குமதி...

யாழில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் 1 பவுண் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சுமார் 4,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் (8 கிராம்) தங்கள் 45,900 ரூபாய் தொடக்கம் 47,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் விலையானது சடுதியாக அதிகரித்து, 50 ஆயிரம்...

வாகன விலை அதிகரிக்காது

வெளி­நாட்டு நாணய மாற்றில் ஏற்­பட்ட தளம்பல் நிலை கார­ண­மா­கவே கடந்த காலங்­களில் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வாக­னங்­களின் விலை அதி­க­ரித்­ததே தவிர வற்­வரி அதி­க­ரிப்­பினால் அல்ல என அகில இலங்கை வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் மஹிந்த சரத்­சந்­திர குறிப்­பிட்டார். மேலும் மே 2 ஆம் திக­திக்கு முன்னர் இறக்­கு­மதி செய்­யப்­படும் வாக­னங்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்ட்ட 15 சத­வீத...

இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத விதத்தில் வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத விதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்து. அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 150.15 ரூபாவாக இன்று பதிவாகியிருக்கிறது. டொலருக்கு எதிராக 148 ரூபாவை தாண்டியது இதுவே முதல் தடவையாகும். இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி பொருளாதாரத்தில் பெரும்...

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு கோரிக்கை

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி இறக்குமதிகளை அரசாங்கம் வரையறுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும். பாடசாலைகளிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் துறையை தேர்வு...

டயலொக் – எயார்டெல் நிறுவனங்கள் ஒன்றாக இணையவுள்ளன!!

இலங்கையிலுள்ள டயலொக் நிறுவனமும் எயார்டெல் நிறுவனமும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. economic_times எனும் பொருளியல் சஞ்சினை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டயலொக் நிறுவனம் இந்நாட்டில் 10.5 மில்லியன் தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு வலைப் பின்னலைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 41 வீதத்தை தம்மிடம் வைத்துள்ளது. எயார்டெல் நிறுவனம் 2.3 மில்லியன் தொடர்பாளர்களை தம்மிடம் வைத்துள்ளது....

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

7 ஆவது வருடமாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது இக் கண்காட்சி 29,30,31 திகதிகளில் யாழ்.மாநகரசபை மைதானத்தில் முற்பகல் 10 தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் நிர்மாணம் உபசரிப்பு உணவு மென்பானவகை, பொதியிடல், வாகனங்கள், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் ,நிதியியல் சேவைகள் ஆடைத்துறை விவசாயம் நுகர்வோர்...

யாழில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது வடக்கிற்கான நுழைவாயில் வர்த்தக கண்காட்சி

சர்வதேச வர்த்தக கண்காட்சி 2016 யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஜனவரி 31 வரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ தெரிவித்தார். சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ். கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை கண்காட்சி...

புகையிரத டிக்கட்டுக்களை கொள்வனவு செய்யும் வசதியை Hutch அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களில் ஒன்றான Hutch, பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் பெறுமதிசேர் சேவைகளில் மற்றுமொரு அம்சமாக Hutch கையடக்கத்தொலைபேசியூடாக நேரடியாக புகையிரத டிக்கட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கும் வகையில் மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. தினசரி புகையிரதம் மூலமாக பயணிக்கும் 300,000 பிரயாணிகளுக்கு இச்சேவை...

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவை ஏற்பாட்டில் ஏழாவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், உள்நாட்டு, வௌிநாட்டு நிறுவனங்கள் பல...

அதிரடியாக அதிகரித்த சிகரட் விலை!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா. கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35...

சீனி மற்றும் பருப்புக்கு தட்டுப்பாடு ?

சீனி மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாத பட்சத்தில், இந்த பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற விலையைக் காட்டிலும், குறைந்த விலையில் உள்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டி ஏற்படுகிறது....
Loading posts...

All posts loaded

No more posts