- Wednesday
- May 7th, 2025

முல்லைத்தீவின் ஆழ்கடல் பிரதேசம் வழியாக அரியவகை இராட்சதப் பறவை ஒன்று பறந்து சென்றுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென்பட்ட இந்த இராட்சதப் பறவை, வட – கிழக்கு கடல் வழியாக ஆழ்கடல் நோக்கிப் பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் முல்லைத்தீவுப் பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு...

உடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு பாரிய இயந்திரங்கள் மூலம் இராணுவத்தினர் நீர் இறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடையார்கட்டு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்று கூடிய மக்கள் பதாகைகளுடன் பரந்தன்-முல்லைத்தீவு வீதிவரை சென்று வீதியின் கரையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து உடையார்கட்டுக் குளத்தில் நீர் இறைக்கும்...

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 15-03-2018 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும்...

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா ஊடகங்கள் வாயிலான இதன் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளார். இது குறித்து...

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. இந்த கையெழுத்து திரட்டும் பணி வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மேற்கொள்ளப்பட்டது. ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 15 ஆம்...

கிளிநொச்சி பன்னங்கண்டிபிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டினருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த வெடிக்காத நிலையில் குண்டு அவதானிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து 4 அடி ஆழத்தில்...

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுதலை செய்யுமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றினை நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்தவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் அவர்களின் மனைவியின் இறுதிக் கிரியை கடந்த 18ம்...

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு அழைத்துவரப்பட்டிருந்த அரசியல் கைதியான தனது தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல மகள் முயற்சித்தமையானது அனைவரது மனதையும் நெகிழவைத்துள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்த ஆனந்தசுதாகர் யோகராணியின் இறுதிச் சடங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மருதநகரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் மனையிவியின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்வதற்காக ...

நேற்று முன்தினம் (15) இரவு வேளையில் கிளிநொச்சி, முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது. முரசுமோட்டை சிவா சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல விக்கிரகமான வேல் முறிக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் சோதனை இடப்பட்டுள்ளது. அத்துடன் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயக்...

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். சிலாபத்தினை சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா,...

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களிற்கு இன்றுவரை எவ்வித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “யுத்தத்திற்கு பின்னர் பல குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக்கப்பட்டுள்ளன. அதிலும் 41...

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள்...

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ32 யாழ் - மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியதன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்...

அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் நேற்று முன்தினம்(06) இரவு தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(07) உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலைக் கோரியும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்திவரும் தொடர் போராட்டம் ஓராண்டு நிறைவடையும் நிலையில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம்...

வழமைக்கு மாறாக இன்று கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது. ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது. காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர். சில...

கிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான ஓட்டை காணப்படுகின்றது. இந்த குறுந்தூர சேவை பேருந்து பாடசாலை நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளையும் ஏற்றிச் செல்கிறது. உடனடியாக இந்தப் பேருந்தை சேவையிலிருந்து நீக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், தொடர்ந்தும் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது....

கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (05) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டர் சைக்கிளில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட நபர் மீது புகையிரதம் மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். பரந்தன் புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர்...

சிரியாவில் இடம்பெற்றுவரும் மனிதப் படுகொலையை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு இளைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிரியாவில் இடம்பெற்று வரும் மனிதப்படுகொலையை கண்டித்தும், இவ்விடயத்தில் ஐ.நா. தலையிட்டு உடனடி தீர்வு வழங்க வேண்டுமென கோரியும், கடந்த 2009ஆம்...

பொதுமக்கள் மனம் தளராமல் தமது உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுடன், எதிர்க்கட்சி தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கேப்பாப்புலவு காணிகளை...

All posts loaded
No more posts