Ad Widget

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுகின்றதா?

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பதிலளித்த போதே, மத்திய வங்கியின் ஆளுநர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

கடன்களை வழங்கும் நிறுவனங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை செவிமடுத்த ஆளுநர், மத்திய வங்கியின் கீழ் வரும் கடன் வழங்கும் நிறுவனங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு, கடன் வழங்கலின் போது இடம்பெறும் மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts