- Tuesday
- January 13th, 2026
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை அங்கு 18 வயதிற்கும் குறைந்தவர்களே கல்வி கற்று வருகின்ற நிலையில்,...
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடுக்குளம். கடந்த 1975 ம் ஆண்டுக்கு...
முல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, ஒருசில தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்போது, சுனில் நிஷாந்த என்ற தனிநபருக்கு சொந்தமான பல மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து...
முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட 27 வெளி மாவட்ட மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எமது பிள்ளைகளின் கல்வி, வாழ்வாதாரம் அனைத்தும் இந்த மீன்பிடித் தொழிலை நம்பியே உள்ளது என முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாயாறு பகுதியின் உள்ளூர் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக குறித்த மீனவ குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்....
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தென்னிலங்கை மீனவர்கள் சிலர் முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்....
முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (10) மாலை அவர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இதன்போது ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் கால்பந்தாட்ட கோல் கம்பம் சரிந்ததில் சிக்குண்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே உயிரிழந்தார். “தனியார் கல்வி நிலையத்திற்கு...
முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக் கோரி இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் திடீரென அத்துமீறி நீரியல்வள திணைக்களத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் நீரியல்வளத் திணைக்களத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக...
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னியன்குளத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் இடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து சிறுவனொருவரின் பாடசாலை பாதணி ஜோடியொன்றும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், புதையல் தோண்டுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் 8 அடி ஆழமான குழியொன்று...
கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பகுதியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி உயிரிழந்த சம்பவம் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். வழமையாக குறித்த பகுதியில் விளையாடுவதாகவும், அவ்வாறே இன்றும் விளையாடிக்கொண்டிருந்த போது அங்குள்ள மரம் ஒன்றில் விளையாட்டுவதற்காக கட்டப்பட்டிருந்த...
தமது பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணவத்தினர் தற்போது தமது வாழ்வாதாராத்தையும் முடக்க முயற்சிப்பதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த ஒருவரின் கடையை அப்புறப்படுத்துமாறு முள்ளியவளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த எரிபொருள் கடையினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும்,...
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் வட.மாகாண அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அமைச்சின் அலுவலகத்தினை நேற்று (திங்கட்கிழமை) அமைச்சர் மனோ கணேசன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள உள்ளிட்டோர் இணைந்து...
கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் வட.மாகாண சபையினால் சுமார் ஆறு மில்லியன் ரூபா செலவில் நிமாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் தற்போது பயனற்றுக் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அது கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. வட.மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ்...
வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது இதில் பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவ மனை கொண்டுசென்று சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து...
வடக்கில் உள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி மற்றம் விவசாய அமைச்சர் முன்னெடுத்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களுடனான குறித் கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதி...
கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் நடமாடுகின்ற போலி வைத்தியரொருவர் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த நபர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றாத நிலையில், அந்த வைத்தியசாலையில் தான் பணியாற்றுவதாகக் கூறி, கிராம மக்களிடம் பணம் அறவிடுதல் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, வைத்தியசாலை...
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கருத்தறியும் அமர்விற்கு வருகைதந்த காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள்...
மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் குறித்த அலுவலகத்தினை திறந்து வைத்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், ப.அரியரத்தினம் ஆகியோரின் மாகாண நிதியொதுக்கீட்டில் இவ்வலுவலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட.மாகாண மகளிர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி...
முல்லைத்தீவில் அனுமதி பத்திரமின்றி இயங்கிவரும் மருந்தகத்தில் பெற்றுக் கொண்ட மருந்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அவற்றை மூடுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை)...
Loading posts...
All posts loaded
No more posts
