- Monday
- July 21st, 2025

வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை...

திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிலைமையொன்று ஏற்படுமாயின், உடனடியாக எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள் அடங்கிய அனர்த்தப் பொதியொன்றைத் தயாராக வைத்திருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கே, இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காணி உறுதி, பணம், தங்க நகைகள், டோர்ச், அத்தியாவசியமான மருந்துகள் ஆகியன அடங்கிய பொதியையே, தயாராக...

யாழில் தொடர்சியாக அதிகரித்து வரும் பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியொன்று யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி...

பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர். எஸ்.அற்புதராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விழிப்புலனற்றோரால் முடியாதது என...

அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை யாழ். மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, நன்கொடைகளை வழங்க முன்வரும்...

எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் இருந்து வருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய...

நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று குறைவடைந்து காணப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று திங்கட்கிழமை மழை பெய்யும்...

தொழிலின் போது கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விவரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத் திணைக்களத்தினூடாகத் திரட்டிவருகிறது. கடலில் தொழில் செய்யும்போது உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வடமாகாண கூட்டுறவு அமைச்சு வாழ்வாதார உதவுதொகையாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. இதற்கமைய கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுகின்றன. கடலில் இறந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள்,...

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகத்தலுக்குமான பொறிமுறை யாழ் மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் எமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ்மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நன்கொடைகளை வழங்க முன்வரும்...

மின் இணைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு மின்வலுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றம் காரணமான அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு...

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை...

அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ள மக்கள் எவராயினும் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினையேற்படுத்தி தகவல் அறிவிக்கலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்தங்கள் தொடர்பில் அறிவித்தும் அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு இதுவரையும் அரச அதிகாரிகள் எவரும் விஜயம் செய்யவில்லை எனில் அல்லது அரச அதிகாரிகள் எவரதும் உதவிகள் இன்னமும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் “ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்”...

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை வடக்கு - கிழக்கான தமிழர் தாயகத்திலும், தரணி எங்கும் நினைவு கூரப்படுகின்றது. பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளன. இவற்றுக்கான ஒழுங்குகளை வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள்...

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெற பொலிஸார் விஷேட இலங்கங்களை அறிமுகப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாம் இருக்கும் இடங்களைப் பற்றி உடன் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் தலைமையகத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், 01. 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 02. பொலிஸ் மா அதிபர் உதவிப் பிரிவு -...

புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமையிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் நடந்துசெல்பவர்களினால் கடந்த காலங்களில் அதிகளவான உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு இன்று முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா...

சீரற்ற காலநிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படின் உடனடியாக அறியத்தருமாறு, அரசாங்க பாதுகாப்பு பிரிவு மக்களிடம் கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் பொருட்டு விஷேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் - 011 2 434 251...

ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....

நாய்களைப் பதிவு செய்துகொள்ளாவிடின், 10 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிர்வாக எல்லைக்குள் இருக்கின்ற சகல நாய்களும், வருடாந்தம் பதியப்படவேண்டும். பதிவுக்கட்டணம் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களினால் தீர்மானிக்கப்படும் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. நாய்களைப் பதியும் போது, அந்நாய்களுக்கு நீர்வெறுப்பு நோய்க்கான தடுப்பூசி வழங்குவதும்...

ரயிலில் பிரவேசச் சீட்டின்றி (டிக்கட்) பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 1500 ரூபாவாக இருந்த அதிகபட்ச அபராதத் தொகை 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று அரசாங்க...

All posts loaded
No more posts