Ad Widget

அதிகரிக்கும் எயிட்ஸ்!! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியின் முதல் ஐந்து மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 135 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவட்ட மட்டத்தில் இந்த நோய் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களை வைத்திய சிகிச்சைகளுக்கு உட்படுத்துவது, விஷேடமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானர்களை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம் என, சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

Related Posts