- Saturday
- September 20th, 2025

ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....

நாய்களைப் பதிவு செய்துகொள்ளாவிடின், 10 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிர்வாக எல்லைக்குள் இருக்கின்ற சகல நாய்களும், வருடாந்தம் பதியப்படவேண்டும். பதிவுக்கட்டணம் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களினால் தீர்மானிக்கப்படும் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. நாய்களைப் பதியும் போது, அந்நாய்களுக்கு நீர்வெறுப்பு நோய்க்கான தடுப்பூசி வழங்குவதும்...

ரயிலில் பிரவேசச் சீட்டின்றி (டிக்கட்) பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 1500 ரூபாவாக இருந்த அதிகபட்ச அபராதத் தொகை 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று அரசாங்க...

சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ்.மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ். மேல்...

சூரியனின் இன்றையதினம் கரும்புள்ளி ஒன்று ஏற்படுவதை இலங்கையில் இருந்து அவதானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.42 முதல் 6.16 வரையான காலப்பகுதியில் இதனை அவதானிக்க முடியும். சூரியனை 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதன் கிரகம் தமது சுற்றுப் பாதையில் கடந்து செல்கிறது. இதன்போது இந்த அரிதான கரும்புள்ளி ஏற்படுகிறது. இதனை இலங்கை, இந்தியா,...

ஆண்களை காதலித்து பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ரேனுகா இரவிச்சந்திரன் என்ற யுவதி தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி சுன்னாகம்,...

நாட்டில் நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலையின் காரணமாக குளிர்பானங்களையும், அதிக சீனி கலக்கப்பட்ட பானங்களையும் பருக வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.இவ்வாறான பானங்களை பருகுவதன் ஊடாக, மீண்டும் உடலில் நீரற்ற நிலை ஏற்படும்...

இலங்கையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இதில் மடத்தடிப் பிரதேசவாசி ஒருவர் 36,000 ரூபா பணத்தை இழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தெரிவித்திருப்பதாவது, நேற்று முன்தினம் எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நாம் குறித்த தொலைபேசி நிலையத்திலிருந்து கதைக்கின்றோம்....

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு,...

வெசாக் பௌர்ணமி தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருவதன் காரணமாக அடுத்த நாள் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச பொது விடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

உலகில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் அடிப்படையில் பல மாற்றும் மிக விரைவான ஏற்பட்டு வருகின்றது. இவற்றுள்ள அதிகமானோர் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மிகவும் பிழையான முறையில் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒன்லைன் மூலம் அதிகமான மோசடிகள் இடம்பெற்று வருவதை நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையில் இப்போதெல்லாம் கையடக்கத் தொலைபேசியூடாக அழைப்பு மற்றும் குறுந்தகவல்...

அரிசி, மா, பால் மா உட்பட பல பொருட்கள் மற்றும் சேவைகள் ‘வற்’ வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. அதன் முழு விபரம் வருமாறு

கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே இதற்கமைவாக நாட்டிலுள்ள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள், தற்காப்புக் கலைஞர்கள், நடனம், தாள வாத்தியம், இசை, மஜிக், கிராமியக் கலை, கவி, திரைப்படம்...

இலங்கையில் சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து...

இலங்கை அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் கருத்துச் சொல்ல விரும்புவர்களுக்கு, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழு சந்தர்ப்பமளித்துள்ளது. சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான 20 பேரடங்கிய குழுவே இவ்வாறு சந்தர்ப்பமளித்துள்ளது. www.yourconstitution.lk என்ற இணைத்தளத்தின் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பொருட்களுக்கு அமைவாக, தங்களுடைய யோசனைகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ முன்வைக்கலாம் என்றும் அக்குழு அறிவித்துள்ளது. குழுவின்...

யாழ்.மாவட்டத்தில் ரௌடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரெளடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரௌடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட...

உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிகளின்...

சிறீலங்காவில் வடபகுதிக்குப் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தினரிடம் பதிவை மேற்கொள்ளவேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் பிரசுரமாகியுள்ளது. மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஐரோப்பாவிலிருந்து வருகைதந்த ஒரு ஈழத்தமிழர் மனித உரிமை ஆணையகத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வடபகுதியில் கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் இச்...

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை...

இலங்கை மக்கள் எதிர்வரும் மே மாதத்திலும் அதிகளவு வெப்பத்துடன் கூடிய காலநிலையை அனுபவிக்க நேரிடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மே மாதம் இறுதி வரையில் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

All posts loaded
No more posts