- Monday
- November 10th, 2025
சீகா வைரஸ் (Zika) தொற்றுள்ள நாடுகளுக்கு பயணிப்பதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சீகா வைரஸ் மற்றும் சிக்கன்கூனியா போன்ற தொற்றுக்களைத் தடுக்கும் நோக்குடன் இலங்கையின் பிரதான விமான நிலையங்கள் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன அதி அவதானத்திற்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேஷியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய...
போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. யாழப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எழுந்து நிற்போம்...
ஸீகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் குறித்து ஸ்ரீலங்காவில் சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிக்குன்குனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன்...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள எழுக தமிழ் எனும் தொனிப்பொருளிலான மக்கள் பேரணி பாரிய எழுச்சியுடன் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே...
தமிழர் தாயகத்தில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழ் தேசியத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ! செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று யாழ் நகரில் !! வடக்கு...
ஒரு சிகரட்டில் நான்காயிரத்து 800 விஷ இரசாயனங்கள் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் 250க்கும் அதிகமானவை கடுமையான விஷம் கொண்ட இரசாயனங்களாகும். புற்றுநோயை ஏற்படுத்தும் 65 வகையிலான இரசாயனங்களும் இதில் காணப்படுகின்றன. இதனால், சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக ஒன்பது கோரிக்கைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி...
மின்சாரப் பிளக்குகள் மற்றும் சொக்கற்றுக்களுக்கான தேசிய தர நியமம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது இது தொடர்பான விதிகள் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பான தகவல்களை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். பொதுப்பயன்பாடுகளின் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க ' 13 அம்பயர்...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இந்த வாரமும் மேற்கொள்ளப்படவுள்ளன. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த 2 ஆம் மாற்று 9 ஆம் திகதிகளில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி மீண்டும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெறவுள்ளதாக...
தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியுமான விதத்தில், தமிழ் மொழியில் கதைப்பதற்கான ஏற்பாடுகளை 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்தினூடாக செய்து கொடுத்துள்ளதாக வட மாகாண பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. பொலிஸுக்கு வருகை தரும் எந்தவொருவரும் தமது பாஷையில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவகாசம் செய்து கொடுக்க வேண்டும் என்ற பொலிஸ் மா அதிபர்...
சகல இணையத் தளங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில், கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. தற்போது செயற்பாட்டில் உள்ள இணையத்தளங்களை கணக்கிடமுடியாதுள்ளதாகவும் நிறுவனங்கள், அமைச்சுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் என்றடிப்படையில்...
இந்த வருடத்தில் முதல் 8 மாதங்கள் வரையான கால பகுதியில் மாத்திரம் 1570 பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி அவசர நடவடிக்கை பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்த தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் முதல் 8 மாதங்கள் வரையான கால பகுதியில் மாத்திரம் பேஸ்புக்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களை மாநகர சபையில் பெற்றுக்கொள்ள முடியும் என, யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்திற்கு வருகைதந்திருந்த பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடமைகளை தவறவிட்ட பக்தர்கள் மாநகர சபையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம்...
நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம் சென்று அல்லது கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு கடன் அடிப்படையில் பல நிதி உதவிதிட்டங்களை செய்கின்றன. ஆனால் அதை வசூலிப்பதற்காக கிராமங்களிற்கு அல்லது கடனாலிகளின் வீட்டிற்கு நேரகாலமின்றி கடனை வசூலிப்பதற்காக recovery officer என்றொருவர் சென்று கடன்களை...
யாழ்.தெல்லிப்பளை மானிடம் இயற்கை வேளாண் பண்ணையில் முதலீடு செய்யுமாறு மானிடம் அறக்கட்டளை சார்பாக அன்புரிமையுடன் வேண்டுகின்றோம். பின்வரும் தெரிவுகளில் ஒன்றின் மூலம் நீங்கள் உதவலாம் . ரூ.ஒரு இலட்சத்துக்கு குறையாத முதலீடு ஒரு வருடத்தின் பின் பங்கு லாபம் ரூ.ஒரு இலட்சம் / 50,000 ஒரு / இரு வருடத்தில் மீளளிக்கும் தொகை வருடம் 25,000...
தனியார் நிறுவனம் ஒன்று அல்லைப்பிட்டி பகுதியில் 68 பேரை சுவிஸ் மற்றும் கனடா தேசங்களிற்கு வேலைவாய்ப்புக்கு எனத் தெரிவித்து அழைத்து செல்லவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் 2ஆம் வட்டாராம் பகுதியில் 68 பேர் சுவிஸ் . கனடா போன்ற தேசங்களிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.VNK buisness network என்ற தனியார்...
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 2-09-2016 ஐ.நா செயலாளர் யாழ்வரும்போது நடைபெற ஏற்பாடாகியுள்ள போராட்டம் இன்று மு.ப 11.30 மணிக்கு யாழ் பொது நூலகம் முன்பாக ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ஊடக அறிக்கையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்
புனர்வாழ்வு பெற்று சமூகத்தடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நலம் தொடர்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை முன்னாள் போராளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்ட...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. நாளை சனிக்கிழமை 03 ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்ததினத்தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவம் நிலையில், நேற்று வியாழக்கிழமை யாழ். போதனா...
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்! போரின் போதும்,...
சந்தையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஹெல்மட் எனப்படும் பாதுகாப்பு தலைக் கவசங்களுக்காக, இன்றுமுதல் புதிய சட்ட நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்தின்படி இவை அனைத்திற்கும், SLS தரச் சான்றிதழ் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தயாரிப்புகள் அனைத்திற்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தாத வர்த்தகர்கள் தமது...
Loading posts...
All posts loaded
No more posts
