- Sunday
- July 20th, 2025

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது. இதன்படி, புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான...

வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை வடமாகாண மக்களிற்கு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் சேவையொன்று இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பருத்துத்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் ஆரம்ப...

மருதானையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாகவும் இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும்...

வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில்...

வாகனங்களின் உரிமையை சரியான முறையில் மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் தற்போதைய உரிமையாளர்கள், தமது வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்கான சலுகைக் காலம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார். வாகனங்களின் ஆரம்ப உரிமையாளரிடமிருந்து சரியான முறையில் உரிமை மாற்றப்படாமையின் காரணமாக வாகன விபத்துக்களின் போது பல்வேறு குழப்படிகளுக்கு முகங்கொடுக்க...

புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அனுமதியுடன் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்....

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது...

எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற குடிநீர் போத்தல்களை பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச் செல்லுதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜுன் மாதம் 11 ஆம் திகதி வெளியயிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர்...

கிராம சேவை உத்தியோகத்தர்களின் மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சை செப்டம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. நாடு பூராகவும் 858 மத்திய நிலையங்களில் இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதுடன், அதற்காக ஒரு இலட்சத்து 9021 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் பரீட்சைக்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ம் திகதி யாழில் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது...

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக வெளிவரும் தகவல்களையடுத்து வடக்கு மாகாண சபையால் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் 12ஆயிரம்...

உரிமையாளர்கள் அல்லாத, அல்லது உரிமை கோரப்படாத பணம், காணி என்பவை அரசுடமையாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உரிமையாளர்கள் அற்ற காணிகள் மற்றும் உரிமை கோரப்படாது வங்கிகளில் வைப்புச்செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதிமோசடி விசாரணைப்...

நாட்டை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக...

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த ஆலயம் அமைக்கப்படுதல் உட்பட வடக்கில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பாகவும், இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கலந்து பேசவும், ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் திட்டமிட்டவாறு இடம்பெறும். திகதி: 13-08-2016 (சனிக்கிழமை) நேரம்: பி.ப 4.00...

பாலியல் துஷ்பிரயோக வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று (10) மாற்றுவலுவுள்ள பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் – மேலும் அவர்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும்,...

நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்ளுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள் மற்றும் கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்கள்...

குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின் பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு...

All posts loaded
No more posts