- Sunday
- September 21st, 2025

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும்,...

நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்ளுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள் மற்றும் கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்கள்...

குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின் பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு...

நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!! வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான்...

போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி இன்றுமுதல் பேருந்துக்கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்புக்களுக்கமைய பேருந்துக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது. இதற்கமைய, இன்றுமுதல் ஆரம்பக் கட்டணமாக 9.00 ரூபா அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ரூபா கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதுடன் ஏனைய...

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புவது முழுமையாக தடைசெய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுல்படுத்தப்படும். குறித்த தினத்திலிருந்து சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப் பரிசோதனை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

ரயில் பயணத்தில் இழைக்கப்படும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க ரயில் திணைக்களம் தயாராகியுள்ளது. அதற்கமைய, அபராத தொகையை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிதிபலகையில் பயணம் செய்வது, ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் உள்நுழைவது, ரயிலில் மதுபானம் அருந்துதல், தவறான வழியில் மற்ற பயணிகளை தள்ளிக்கொண்டு வருவது போன்ற குற்றங்களுக்காக அபராதத் தொகையே...

பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சை ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன் தகவல் தருகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள் குறித்து, முறையிட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 077 32 20 032 என்ற கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பதன் மூலமோ, குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ...

'இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்'...

வரவு செலவுத் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத வேதனத்தில் 2500 ரூபா அதிகரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2500 ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதா என ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் பி.எஸ்.பத்திரன தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத் திணைக்களத்தினால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த 2500ரூபா வேதன...

மாநகர சபையின் தீயணைப்புச் சேவையைப் பெறுவதற்கான தொடர்பு இலக்கங்களை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி தீவிபத்து ஏற்படும் பட்சத்தில்,0213207777 மற்றும் 0777040126 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த சேவை 24 மணித்தியால சேவையாகும். தீ விபத்து ஏற்பட்டு பரவ முன்பதாக ஆரம்ப நிலையிலேயே அறிவித்தால்...

கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன் எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும்...

இன்று வியாழக்கிழமை (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையான நாட்களில் நாடு முழுவதும் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திப் பொருட்கள் அனைத்தினதும் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது எனத வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். வெதுப்பக உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாம் எண்ணெய், மாஜரின், உப்பு, சீனி என்பவற்றின் விலை 20 வீதத்தால் உயர்ந்துள்ளது. இது குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதன் பின்னர் விலை அதிகரிப்பது குறித்துத்...

வன்னி இறுதி யுத்தத்தில் அழிந்து போயுள்ள வாகனங்களுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பல, முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்டிருந்ததுடன், அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர். பின்னர், அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன. இந்நிலையில், தமது வாகனங்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை...

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன்...

கதிர்காமம் ஆலயததுக்குச் செல்ல, இலங்கை போக்குவரத்துச் சபையினால், விசேட பஸ் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் தெவித்தார். கதிர்காமக் கந்தன் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 18, 19, 20ஆம் திகதிகளில், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, கதிர்காமம் நோக்கிப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப விசேட...

தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்துக்கமைய, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இந்நோயினால்...

All posts loaded
No more posts