- Tuesday
- November 11th, 2025
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் 'சம்சுங் நோட் 7' திறன்பேசிகளை கொண்டுவருவது மற்றும் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த திறன்பேசிகளுடன் தமது விமான சேவையைப் பெற்றுக்கொள்ள வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,...
உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது. இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர். அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும்...
யுத்தத்தில் முகத்தில் காயமடைந்து சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் மக்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர் அறிவித்துள்ளனர். குறித்த சத்திரசிகிச்சையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2...
கலக்ஸி நோட் 7 கையடக்க தொலைபேசிப் பாவனையாளர்கள் உடனடியாக அதன் பாவனையை நிறுத்த வேண்டும் என சம்சுங் நிறுவனமும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. சம்சுங் கலக்ஸி நோட் 7 கையடக்கத் தொலைபேசியில் ஏற்படும் திடீர் வெடிப்புக்கள் மற்றும் தீ விபத்துக்களை அடுத்தே சம்சுங் நிறுவனம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. ஏற்கனவே கலக்ஸி நோட் 7 கையடக்க...
பொதுமக்கள் வழங்கும் மிகவும் முக்கியமான முறைப்பாடுகளுக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவார்களாயின், அது தொடர்பில் தனது தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்றுச் சனிக்கிழமை (08) அறிவித்துள்ளார். ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம், நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என, பொது மக்கள் எண்ணினால், 0718592020 என்ற...
ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டார். ‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும். நாட்டில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஓய்வுபெற்றவர்கள் இருப்பதாக...
கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின் கால்நடை தீவனப்பொருட்கள் நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த தீவனப்...
பல்வேறு காரணங்களினால் இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார். இந்த அவகாச காலம் இன்று (03) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 2017 ஜனவரி வரையில் நடைமுறையில் இருக்கும் எனஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலத்துக்குள் 450 வேகம்...
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார். இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கிலப் பயிற்சிநெறியொன்றை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் தொடர்பில் புதிய ஒழுங்குமுறை திட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பயணிகள் போக்குவரத்துக்காக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் இந்த வேலைத் திட்டம்...
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக...
யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கும் அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எழுந்து நிற்போம் எனும் தொனிப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரச வைத்தியர் சங்கத்தினர் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணி...
கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளன.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை (24-09-2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களைப் பூட்டி பேரணிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. இவ்வாறு தமிழ் மக்கள் பேரவையினரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள “எழுக தமிழ்“ நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு எமது அபிலாசைகளை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்தியம்புவோம் என அறைகூவல் விடுத்துள்ளார் கௌரவ முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள். அவர் தனது அறிக்கையில் என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு,...
இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச்...
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை எதிர்வரும்...
தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை தமிழ் மொழியில் முன்வைக்க புதிய பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 0766 22 49 49 மற்றும் 0766 22 63 63 என்ற இலக்கங்களுக்கு...
எழுகதமிழால் பேரெழுச்சி கொண்டு தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்பம் தமிழ் மக்களே தவறவிடாதீர்கள் எனவும் இலட்சமாய் முற்றவெளி நோக்கி அணிதிரளுங்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன் முழு வடிவம்..
Loading posts...
All posts loaded
No more posts
