- Saturday
- July 19th, 2025

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை திருத்தம் சம்பந்தமாக யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பிலான கருத்துக்களை எழுத்து மூலமாக வழங்குமாறு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கூறினார். செயலாளர், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப்...

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது அல்லது கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான எந்த தீர்மானமும் அரசிடம் இல்லையென்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார்...

மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை, பொருளாதார மத்திய நிலையத்துக்கு விநியோகிக்கும் நடவடிக்கைக்கு மாத்திரம் பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் கலைமாணித் தேர்வு பகுதி 1 - 2013 (வெளிவாரி) பரீட்சையை, எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளையும் நாளை 08ஆம் திகதி தொடக்கம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக...

யாழ் மாவட்ட பொதுமக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை வழங்குபவர்கள் தொடர்பிலான விபரங்கள...
நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும்...

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக, எதிர்வரும் சனிக்கிழமையும் (03), ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை, ஆட்பதிவுத் திணைக்களத்தைத் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகவும் பக்கச்சார்பின்றி தீர்ப்பதற்கும் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பொது மக்களின் தேவைகளை...

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரையின் பேரில் உணவுப் பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தூர இடங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் நிறுத்தும் இடங்களிலுள்ள உணவகங்களில் இக் காலப் பகுதியில் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, குடி...

கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கடந்த 16ம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான...

அரச ஊழியர்களின் பதவியுயர்வுக்கு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் சேவைக் காலத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வுகள், எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இப்பதவியுயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்...

வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தொகை அதிகமானது அல்லவெனும் அவர் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தியிருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், எம்மோடு தொலைபேசி நிறுவனங்கள் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது தொலைபேசி அழைப்புகளிற்குப் பதிலாக அதிகமானோர் வைபர்...

நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில், அதாவது, பாடசாலையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவுக்குள், சிகெரட்டுகள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்போவதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன், சுண்ணாம்பு மற்றும் பாக்கு விற்பனைக்கு எதிராகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க, நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். புகையிலை...

தற்போது பெய்து வரும் கடும்மழை காரணமாக, பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ - 32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதியை ஊடறுத்து, நீர் பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கும் மேலாக நீர் பாய்கின்றது. இதனால் இப்பகுதியூடாக கனரகங்களைச் செலுத்திச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதியினூடாக...

மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களைத் தூண்டி விடுபவர்களை விசாரணை செய்ய...

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி...

வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று (18) கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா் மரணமடைந்துள்ளார் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த 57 வயது நிரம்பிய விவசாயியே எலிக் காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார். எனவே...

இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக அன்றையதினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஷேட ஒருநாள்...

All posts loaded
No more posts