- Sunday
- September 21st, 2025

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இடம்பெறும் பாதை சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்துறை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, காலை 7.30 மணிக்கு காரைநகரிலிருந்து ஊர்காவற்துறைக்கு பாதை சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேச செயலருக்கு அரச உத்தியோகத்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இவ் நேரமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் வீதி அபிவிருத்தித்...

தற்போது நாடளாவிய ரீதியில், காலை மற்றும் மாலை வேலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிர் காரணமாக, பிறந்த சிசுக்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கும் என்று, குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. இந்தக் குளிர்காலத்திலிருந்து தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு, எந்நேரமும் உடலைச் சூடாக வைத்துக்கொள்வதற்கான ஆடையை அணியுமாறும், சூடான உணவுகளை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும்...

எதிர்வரும் 16-ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான லன்ஞ் சீற் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடாபில் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல்...

எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமையன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணிவரையிலான 2 மணிநேரத்துக்கு, 119 தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த வேண்டாமென பொலிஸ் தலைமை அலுவலகம் கடந்த 5ஆம் திகதியன்று அறிவித்திருந்தது. பொலிஸ் அவசர மத்திய நிலையத்தின் குறுகிய இலக்கமான 119 தொலைபேசி வலையமைப்பில் அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் அவ்வலையமைப்பில்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. குறித்த திருத்தப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையத்தின் ஓடுபாதையின் திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக 8...

அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14,000 கிலோ கிராம் அரிசி, அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு - 11 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,...

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு எதிர்வரும் 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 9ம் திகதி அதிகாலை 04.00 மணிமுதல் 06.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கை...

எஸ்.எல்.எஸ் (SLS) தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் (ஹெல்மட்) பயன்படுத்துவதற்கு, இவ்வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதென்று, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், இன்று அறிவித்தது. அதனால், தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது, அவதானமாகக் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களிடம், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், அறிவுறை வழங்கியுள்ளது. தற்போது இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள்...

பொதுச்சொத்துக்கள் பொது இடங்களில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் வீதிகளின் ஓரங்களில் நிழல்தரும் மரங்களில் விளம்பரத் தகடுகளை ஆணிகளைப் பாவித்துப் பொருத்துதல் என்பன யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (01.01.2017) முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை விளம்பர நோக்கத்துக்காகவும் அறிவுறுத்தல் நோக்கத்துக்காகவும் காட்சிப்படுத்தவிரும்புவோர் இரண்டுக்கு மேற்படாத சுவடிரொட்டிகளை யாழ்.மாநகரப் பகுதிகளில் நிறுவியுள்ள விளம்பரப்...

இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. அரசாங்கத்திலுள்ள வைத்தியசாலைகளில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுப்பது தொடா்பாக உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு விபரங்கள் அனுப்ப வேண்டியிருப்பதனால் வாகனங்களை பாவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்திடம் வழங்குமாறு குறித்த சங்கம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதி பத்திரம் தேவையான மாற்றுத்திறனாளிகள் முதலில் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி உதயநகா்...

சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகும் விதத்தில் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கூடுதல் தண்டனை வழங்கக்கூடிய யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்டொக்டர் மஹிபால மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தாலும், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார...

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்த நிவாரணக் காலம் வழங்கப்பட்டிருந்ததாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறுகிறார். அந்தக்...

2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் வைத்தியசாலையானது போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்படவேண்டுமென்பதால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 1.5...

யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...

2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள்...

பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை நுகர்வோர் அதிகார சபை நிராகரித்துள்ளது. பால்மா கிலோகிராம் ஒன்றின் விலையை 810 ரூபாயிலிருந்து 927 ரூபாய் வரை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய, 325 ரூபாய்க்கு விற்கப்படும் 400 கிராம் பால்மா, 375...

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு, இன்று 26ஆம் திகதியுடன் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றுக்காலை 9:25க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்டெட்டின்ஸ் (STATINS) இருதயநோய் தடுப்பு மருந்துகளை தேவையில்லாத நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக முழுவதும் சுமார் 8 இலட்சம் மக்கள் குறித்த மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இம் மருந்தானது 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், கடுமையான இருதய நோய்...

All posts loaded
No more posts