தரமான தலைக்கவசம் அணியும் சட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுல்

மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கான தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய தலைக்கவசம் அணியும் சட்டம் எதிர்வரும் ஏப்றல் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை தரப்படுத்தும் நிறுவனமும், நுகர்வோர் அதிகார சபையும் இந்த பணிக்கு...

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டி புதிய சட்டங்கள் அமுல்

இதுவரையில் முச்சக்கர வண்டி தொடர்பில் அறிமுகம் செய்துவந்த புதிய சட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் மேற்படி திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அறிமுகமாகியுள்ள புதிய சட்டதிட்டங்களின் படி, அனைத்து...
Ad Widget

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் இன்று அதிகாலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் : சில இடங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழையின்போது வலுவான காற்றும் வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள்...

இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 48 மணித்தியாலத்துக்குள் வடக்கு, கிழக்கு உட்பட வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட...

 31ஆம் திகதி “ட்ரோன்“ பயிற்சி

ட்​ரோன் புகைப்படக் கருவியை பயன்படுத்தும் போது, கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வை அரச தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வு அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 31ஆம் திகதி,முழுநேர செயலமர்வாக நடைபெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடக வர்த்தகம் மற்றும்...

வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் கலப்பற்ற விதத்தில் இளைஞர்களின் ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நாளை (26.01.2017) வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை 27.01.2017 அன்று காலை 9 மணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் வவுனியா விஜயம் செய்யப்பட்டு உண்ணாவிரத...

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர். களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு,...

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டம்

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமான வரி...

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...

இனி வாகன ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்த முடியாது

வாகனங்களின் முன் வாயில் ஜன்னல்களில் உள்ளிருப்பவர்களை மறைக்கும் வகையிலான திரைச்சீலைகள் (curtains) அல்லது கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் (tints) போன்ற திரைகளை இடும் நபர்களுக்கு எதிரான சட்டம் இன்றும் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. யாழ். நல்லூரில் நேற்றுமாலை ஆயிரக்கணக்கான...

எழுக தமிழ் பிற்போடப்பட்டது

மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில்...

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! நல்லூரில் அணிதிரள அழைப்பு!

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை நேற்று காலை பொலிஸார் கைது செய்தனர். இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய்....

குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்

நிலவிவரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடி நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில், பவுசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடி நீர் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை...

கடுமையான வரட்சி : A/C பாவனைக்கு சுற்றறிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் நோக்கிலும், மின்பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், அரச அலுவலகங்களிலுள்ள (A/C) பாவனையை, குறைத்துக்கொள்ளுமாறு கோரி, சுற்றறிக்கையொன்றை வெளியிடப்படவுள்ளது. இந்தச் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச ஊழியர்கள், A/C யினை 26 பாகை செல்சியஸுக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறும் குறிப்பிடப்படும் என்றும், எரிபொருள் மற்றும்...

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய ஒழுங்கு விதிகள் : வர்த்தமானி வெளியாகின

பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் விசேட ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன். கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் பற்றுசீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வலது பக்கத்தால் உள்நுழைய முடியாமல் முற்றாக அல்லது பகுதி அளவு...

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதிலும் நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ‘பாதை’ நேரத்தில் மாற்றம்

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இடம்பெறும் பாதை சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்துறை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, காலை 7.30 மணிக்கு காரைநகரிலிருந்து ஊர்காவற்துறைக்கு பாதை சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேச செயலருக்கு அரச உத்தியோகத்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இவ் நேரமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் வீதி அபிவிருத்தித்...

சிசுக்கள், கர்ப்பிணிகள், வயோதிபர்களுக்கு எச்சரிக்கை

தற்போது நாடளாவிய ரீதியில், காலை மற்றும் மாலை வேலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிர் காரணமாக, பிறந்த சிசுக்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கும் என்று, குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. இந்தக் குளிர்காலத்திலிருந்து தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு, எந்நேரமும் உடலைச் சூடாக வைத்துக்கொள்வதற்கான ஆடையை அணியுமாறும், சூடான உணவுகளை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைக்கு தடை விதிப்பு!

எதிர்வரும் 16-ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான லன்ஞ் சீற் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி...
Loading posts...

All posts loaded

No more posts