- Saturday
- February 28th, 2026
வீசா இன்றி இலங்கை பிரஜைகள் கனடாவிற்கு செல்ல முடியும் என வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வீசா நடைமுறையில் வழமையான நடைமுறைகளே பின்பற்றப்படுவதாக அந்த உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் நேற்று (17) வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் இது தொடர்பாக தெரிவிக்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014, 2015 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள்...
பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிலும் மழைபெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த காலநிலை ஏப்ரல் மாதம் வரையில் தொடரவுள்ளது. எனவே பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை மற்றும் இடியுடன்கூடிய மழை பெய்யவுள்ளது. மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலேயே அதிகளான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது....
பலாலி விமான நிலையத்திற்காக அரசினால் 1952 மற்றும் 1983 ஆகிய காலப்பகுதிகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்டிருந்த 956 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களையும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களிடம் பதியுமாறும் கோரப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ முகாமிற்காக 1952 மற்றும் 1983ம் ஆண்டுகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களிற்கான நட்ட ஈடு இன்றுவரை அரசினால்...
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் யாழ்ப்பாணம் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய்க் கிணறுகளைத் தடைசெய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீர்வள முகாமைத்துவக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு குழாய்க் கிணறுகளும் ஓர் காரணமாக அமைகின்றது. வீடுகள், பொதுக்கட்டிடங்கள், அமைக்கும் போது அதற்கான அனுமதியில் குழாய்க் கிணறுகள்...
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு சப்ரகமுவ மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கடற்பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...
பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (clearance) இன்று முதல், இணையத்தளத்தின் மூலம் துரிதமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய இணையத்தளம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்கு அமைவாக, இன்று முதல் www.police.lk என்ற இணையத்தளத்தினூடாக, பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தினைச் சமர்ப்பித்து, துரிதமாகப்...
யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வருவதை இயன்றளவு தவிர்க்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்... கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்று நோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் குறிப்பாக டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு...
சவூதி அரேபியா, லெபனான் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்று காணாமல் போன இலங்கையர்கள் ஐவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவதற்காக, மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இதுவரை எவ்விதத் தகவல்களும் இல்லாத இந்நபர்கள் தொடர்பில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், காணாமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது....
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப்...
அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள் சதோச களஞ்சியசாலைகளில் தேவையான அளவு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி நகர மற்றும் சன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை...
மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக வடமாகாண வைத்தியர்கள் எதிர்வரும் 2 ம் திகதி வியாழக்கிழமை வடமாகாணத்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ...
வட மகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்காக அவர்களை இன்று புதன் கிழமை முதல் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அழைப்பினை வடக்கு மாகாண சபையின உறுப்பினர் கனகரட்னம் விந்தன் விடுத்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக காலவறையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டும் வரும் வேலையற்ற பட்டதாரிகளை நேற்று செவ்வாய்கிழமை...
திருகோணமலை – கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஆழ்கடல் பகுதிகளில் மேக மூட்டம் அதிகமாக இருப்பதோடு, காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த...
கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள்...
கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கில் டெங்கு தொற்று தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்றைய தினம் வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே மேற்கண்டவாறு தீர்மானம்...
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் முறை தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று (23) இரவு வௌிடைப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த...
கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின்...
Loading posts...
All posts loaded
No more posts
