- Sunday
- September 21st, 2025

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ்...

வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவை அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக, பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்த அறிவுறுத்தல் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார,...

பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு...

“நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது” என்று, யாழ்.போதனா வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஜமுனாந்தா தகவல் தெரிவித்துள்ளார். நோய் கிருமிகளின் பெருக்கத்தினால் ஏற்படும் ஆஸ்மா, கண்நோய்கள் தொடர்பிலும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும்...

பாடசாலைகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள், புகைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் தனி சிகரெட்டை விற்பனை செய்வதற்கும் தடைவிதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். புகைத்தல் காரணமாக ஏற்படுகின்ற நோய்களுக்காக, அரசாங்கம் வருடாந்தம் 72 பில்லியன் ரூபாயைச்...

இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, யாழ். மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் துறையில் கல்விபயிலும் மாணவியான அ. ஏஞ்சல் தெரிவித்துள்ளார். அதிகரித்து வருகின்ற காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்றும் குறிப்பாக, காடழிப்பு மற்றும் அதிகரித்த வாகனங்களின் பாவனை, நீர் வீண்விரயோகம் போன்ற காரணிகள் வெயில் அதிகரித்தமைக்கான காரணம்...

யாழில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் என்1,எச் 1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று நேற்று யாழ். போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியாசாலையில்...

வடமாகாணத்தின் பல பகுதிகள் வறட்சியினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தீவகப் பகுதிகள் மார்ச் மாதத்திலேயே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்துடன் ஒப்பிடும்...

சமகாலத்தில் நிலவிவரும் அதிக சூரிய வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஐ.எல். மொஹமட் ரிபாஸ் தெரிவித்துள்ளார். சூரிய வெப்பம் அதிகமாக காணப்படும் காலப் பொழுதான, முற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தேவையற்ற பயணங்களைத்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடுத்துவரும் மாதங்களில் மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சித்திரை சிறுமாரி சிலவேளை பெய்யாவிட்டால் அல்லது தீவுப் பகுதிக்கு முதலாவது இடைநிலைப் பருவகால மழை கிடைக்காவிட்டால், மே ஆரம்பப் பகுதியில் நீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும்...

அளவுக்கு அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம். வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது. 0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்களால் முறைப்பாடுகளை வழங்க முடியும். வாகனங்களின் புகைப் பரிசோதனையை...

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட் ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு...

சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இடம்பெற்ற விவாதத்தில் அவர் உரையாற்றினார். சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பிற்கு நுாற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

இலங்கைக்கு நேராக சூரியன் காணப்படுவதினால் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றுமுதல் வெப்பம் அதிகளவில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 12.13லிருந்து ஹம்பாந்தோட்டை , கட்டுதம்பே , நாகியாதெனிய மற்றும் மலிதுவ ஆகிய இடங்களில் நேராக சூரியன் காணப்படும். நாடெங்கிலும் 30 செல்சியசிற்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த...

மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார். நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருக்கின்ற போதும், தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அதிக செலவு ஏற்பட்டாலும் மின்சார விநியோகத்தை...

இன்புளுவன்சா AH1N1 காய்ச்சலுக்கு சமாந்தமரமாக மற்றுமொரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார இதனைக் கூறினார். இந்த வகை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறியாக தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் காணப்படும்...

நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனை செய்யக் கோருபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ட்பளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை பரீட்சாத்திகள் பாடசாலை அதிபருடாக விண்ணப்பிக்குமாறும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தேசிய பத்திரிகைகளில் விரைவில் வெளியிடப்படவுள்ள மாதிரி விண்ணப்பப்படிவங்களுக்கு அமைவாக...

இலங்கையில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வார காலத்திற்கு சிறப்பு வேலைத் திட்டமொன்றை செயல்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் 3 மாத காலப்பகுதியில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 24 ஆயிரத்து 600 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு என சந்தேகிக்கப்படும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார...

All posts loaded
No more posts