- Wednesday
- January 14th, 2026
தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை வழங்க யாழ்ப்பாண மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மாவட்ட செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்த உதவி திட்டத்தில் பொதுமக்களையும் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார். இது விடயம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்....
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க யாழ். மக்கள் முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும், அரிசி, சீனி, பருப்பு, பால்மா, மற்றும்...
யாழ்.பொதுநூலக எரிப்பின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. யாழ். பொதுநூலக முன்றலில் இன்று (வியாழக்கிழமை ) மாலை 06 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு. “இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாகப் பண்பாட்டுப் படுகொலை” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்...
வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்த ‘மோறா’ சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) பங்களாதேஷ் பகுதிக்குள் நிழையும் எனவும் இதன்காரணமான இலங்கைக்கு பதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, மேகம் மூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் அதிக மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்வு...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி, எதிர்வரும் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள், இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள தாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா (KOLKATA) நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும் வங்களாதேஷ் நாட்டின் சிட்டாகொங் (CHITTAGONG)...
நாட்டின் அனர்த்தநிலை காரணமாக 8 மாவட்டங்கள் அதியுயர் ஆபத்து வலயங்களாக தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதால் இரத்தினபுரி,கேகாலை,காலி,களுத்துறை,மாத்தறை, அம்பாந்தோட்டை,கண்டிமற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பது ஆபத்தானது என்றும், அடுத்துவரும் நாட்களுக்கு குறித்த பகுதி மக்கள் மிகவும்...
CTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் NCIT யினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வில் இணையம் , மென்பொருள், இணைய வடிவமைப்பு , மொபைல் அப்ஸ், இலத்திரனியல் தகவல் பாதுகாப்பு , நெற்வேக்கிங் , இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அதுதொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனங்கள்...
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ்.மாவட்ட வானிலை...
வௌ்ள அனர்த்தம் காரணமாக, நாளைய தினம் நடைபெறவிருந்த பொது நிர்வாக சேவை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த பரீட்சையை நடத்துவதற்கான மற்றுமொரு தினம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், விரைவில் பரீட்சை தினத்தை அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள் அனர்த்த நிலை தொடர்பில்,...
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய 011-2136226, 011-2136136 அல்லது 077-3957900 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொண்டு முகம் கொடுத்துள்ள அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மத்திய மலை...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்குடன் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத் திட்டத்திற்கு அமைய பயணி ஒருவர் தனது கைப்...
முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. இவ்வாறான இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாளையதினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பூரண கடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதன்போது அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள்...
பாடசாலைகளில் பொலித்தீன் பாவனையை தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பெற்றோரும் மாணவர்களும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் பாடசாலை...
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்காவிடில் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முதல் எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இன்று நள்ளிரவு...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கத்திடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அம்மாணவர்களிடம் இருந்து,...
அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) - 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம்திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. அனைத்து...
அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்: - Update Windows Patches - விண்டோஸ் பெச்சஸ்களை மேம்படுத்திக்கொள்ளவும். - Backup all documents...
Loading posts...
All posts loaded
No more posts
