- Wednesday
- August 6th, 2025

அடுத்து வரும் 3 மாதங்களுக்கு சகல மின்பாவனையாளர்களும் தமது வீடுகளில் 2 மின்குமிழ்களை அணைப்பதுடன், அரச – பொது நிறுவனங்களில் மின்பாவனையை 10 சதவீதத்தால் குறைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க மின்சக்தி அமைச்சுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த...

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் மின்சா தடை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகவுள்ளது. அதன்படி நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது. நாட்டில் வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில், மின்சார தடை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் போதிய மழை இல்லாமை காரணமாக நாடுமுழுவதும் சுழற்சி முறையிலான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் பகல் வேளையில் மூன்று மணிநேரமும் இரவு வேளை ஒரு மணி நேரமும் நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. லக்ஸ்பான, மேல்...

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டால் முதல் நாளிளேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்பொழுது பரவி வரும் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார் ஏனையவர்களிலும் பார்க்க அபாய நிலைக்கு உள்ளாகக்கூடும் தொண்டைக்கும், பாதிப்பு ஏற்படும். குடும்ப சுகாதார பணியகத்தின்...

யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில்நேற்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் போன்ற எந்த...

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து...

வடக்கில் அதிகரித்த வெப்பமான சூழல் நிலவி வருகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படலாமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால், மதிய நேரங்களில் வெயிலில் வேலை செய்வதைத் தவிரத்துக் கொள்ளுமாறும் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபையின் 40ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்படுதியில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நிரந்தர மற்றும் பயனுறுதி வாய்ந்த தீர்வை நோக்கி நகர்த்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவம் வாய்ந்த்து என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற...

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள்...

வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 32 தொடக்கம் 41 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்றுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...

இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட பலவீனம் காணமாக மக்களின் உடலில் உஷ்ணம் மேலும் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதிகளவு நீர் அருந்துமாறு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இந்த காலநிலை மேலும் அதிகாரிக்க கூடும் என்பதனால் அதிக வெப்ப நிலை அதிகரிக்கும். வெளி இடங்களில்...

வடக்கு மற்றும் கிழக்கில் கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள இணையம் அலுவலகத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு...

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை சிறுவனின் தந்தை வழங்கியுள்ளார். ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 9-ல் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த...

எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மொழியை கற்போம் மனதை வெல்வோம் வேலைத்திட்டத்தின் கீழ், மோதர பாடசாலைகளை மையப்படுத்திய மொழிக்கற்கை பயிற்சி, தேசிய மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) வட...

நாட்டில் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது...

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இருபாலைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த வேன் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்ததால்,...

நாட்டில் மற்றைய மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்துக்கள் அரசியல் அநாதைகள் என்ற நிலை காணப்படுகிறது. அதனை மாற்றியமைத்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்து மக்கள் குறை கேள் அரங்கம் ஒன்றை நடாத்துவதற்கு சகல தரப்பினருக்கும் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை அழைத்துவிடுத்துள்ளது. இந்த அரங்கம் வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம்...

காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை...

உயிரோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? எனக் கேட்டுப் போராடும் உறவுகளுக்கு ஆதரவாக “மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்தக் கோரி” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் (09) சனிக்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் காலை 10 மணி முதல் 11...

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான...

All posts loaded
No more posts