- Thursday
- September 3rd, 2026
வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த சேந்தாங்குளம் பகுதியில், ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பான ஐ.ஓ.எம். நிறுவனத்தால் அமைக்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள், அந்தப் பகுதி மக்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டன. (more…)
சாவகச்சேரி பிரதேச சபையால் அடுத்த வருடத்தில் பிரதேசத்தில் 310 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (more…)
பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில் சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள் வலுக் கட்டாமயமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.அந்த இடத்தில் இன்று 250 மில்லியன் ரூபாவில் சுற்றுலா விடுதி அமைப்தற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. (more…)
யாழ்.மாவட்டத்தில் தற்போதும் இயங்கி வரும் நலன்புரி நிலையங்களை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார். (more…)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3554 மில்லியன் ரூபா செலவில்அமைக்கப்பட்டு வரும் சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றது.நாடு பூராகவும் லக்சபானா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கிளிநொச்சியிலும் சுன்னாகத்திலும் உப மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் பிரகாரம் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட உப மின் நிலையம் தற்போது செயற்பட்டு...
தீவகத்தை மையமாகக் கொண்டு ஏழு துறைகளில் பெரும் அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு இந்தோனேஷிய நிறுவனமான பி.ரி.பனோறோமா என்ற நிறுவனம் ஜனாதிபதியிடம் அனுமதியைப் பெற்றுள்ளது என்று நிறுவனத் தலைவர் வா.இராசையா தெரிவித்துள்ளார். (more…)
யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது பிரசவ விடுதி அமைந்துள்ள இரண்டு மாடிக்கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சகல வசதிகளும் கொண்டதாக பிரசவ விடுதிக்கான புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது இந்தத் தகவலை வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)
யாழ். பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முற்றாக சேதமடைந்து காணப்பட்ட அனர்த்த எச்சரிக்கை கோபுரம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று சனிக்கிழமை விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்தார். (more…)
கனடா நாட்டு தமிழ் வர்த்தகர் கழகம் வடக்கில் முதலிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் முதலீடு செய்வதற்கான எண்ணக் கருப்பத்திரத்தை வெளிவிவகார அமைச்சில் கனடா வாழ் தமிழ் வர்த்தகர்கள் சமர்ப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. (more…)
யாழ்.நகரில் இடம்பெற்றுவரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் உரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தப்படவில்லை. வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறும்போது பொது மக்களின் போக்குவரத்துக் குறித்து மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். (more…)
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட 56 வீதிகள் 27 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்தார். (more…)
யாழ். நாவாந்துறை பகுதி வீதிகளுக்கு தார்ரிட்டு செப்பனிடும் பணி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.புறநெகும 'நெல்சிப்' திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள், வடிகால்கள் அபிவிருத்தி பணிகளின் கீழ் யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை கமால் வீதி, வைரவர் வீதி, மாவடி வீதி போன்ற வீதிகள் தார் இட்டு செப்பனிடும் பணி இடம்பெறுகின்றன. (more…)
கொழும்புத்துறை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் பிறவுண்ஸ் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தாங்கி அடிக்கல் நடும் நிகழ்வு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைத்தார். இந்த...
ஏ - 9 வீதி புனரமைப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் நிறைவு பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் மரியதாசன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வீதி அகலிப்பின் போது பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் அபிவிருத்தியானால் ஏற்படுகின்ற சாத, பாதகங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடலின்...
ஐ.ஓ.எம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடற்றொழில் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருமம் பாசையூர் இறக்குதுறை நிர்மாண அபவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாசையூர் கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 50 மில்லியன் ரூபா செலவில் இந்த இறங்கு துறை புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. (more…)
இலங்கையின் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில்...
வடக்கிற்கான புகையிரதப் பாதைகள் நிர்மாணப்பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வடபகுதி புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் 185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் நோபுஹிட்டோ ஹோபு தெல்லிப்பளை மீள்குடியேற்ற மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்களை; நேற்றய தினம் சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற பகுதியில் சமூக செயற்பாட்டு மையத்தின் ஊடாகவும் தெல்லிப்பளை மீள்குடியேற்ற பகுதி மக்களுக்கு 5.153 மில்லியன் ரூபா நிதியில்...
Loading posts...
All posts loaded
No more posts
