Ad Widget

குடியிருந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டு சுற்றுலா விடுதி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில் சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள் வலுக் கட்டாமயமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.அந்த இடத்தில் இன்று 250 மில்லியன் ரூபாவில் சுற்றுலா விடுதி அமைப்தற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றுலா தங்குமிட விடுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று யாழ். பண்ணையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க, யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட இணைப்பாளர் ரொஹான் பாலியங்கொட, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ். மாநகர சபையும், நகர சபையும் இணைந்து 250 மில்லியன் ரூபா நிதியில் ‘முத்தமிழ் சதுக்கம்’ எனும் பெயரில் இக்கட்டிடத்தினை நிர்மாணிக்க உள்ளது.

150 பேர் ஒரே தடவையில் தங்குவதற்கு ஏற்றவகையில், நவீன வசதிகளுடன் இக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் அரச உத்தியோகத்தர்கள் விடுதிகளில் அறைகளை பெற்றக் கொள்வதற்கு அதிகளவிலான பணத்தினை அறவிட்டு அறைகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.

இதனால் சில அரச அதிகாரிகள் அதிகளவான பணத்தினை கொடுத்து விடுதிகளில் அறைகளை பெற்றுக் கொள்வதற்கு சிரமப்படுவதனால், மிகக் குறைந்த கட்டணத்துடன் தங்குமிட அறைகளை வழங்கும் நோக்கத்துடனேயே இக்கட்டத்தினை அமைப்பதற்கு தீர்மானித்ததாகவும் எதிர்வரும் 2013 டிசெம்பர் 6 ஆம் இதன் கட்டட நிர்மாண பணிகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன்சிகேரா, 511 படைப்பிரிவின் இராணுவ அதிகாரி மேஜர் பல்லேகல, சமய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts