கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் சாவு!

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இன்று புதன்கிழமை 9.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். முல்லைத்தீவிலிருந்து வவுனியாநோக்கி சென்ற தனியார் பஸ், இ.போ.ச. பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இந்தப் பெண்ணை தனியார் பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி...

பற்றைக்காட்டிற்குள் வளர்ந்த சிறுமிகள்!

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம்நேற்று நடந்துள்ளது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் நேற்று மதியம் சென்றிருந்தனர்.அப்போது, பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில்...
Ad Widget

உருத்திரபுரத்தில் காணாமற்போன சிறுமியை கண்டுபிடிக்க மூன்றாவது நாளாகத் தேடுதல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுகாடு பகுதியில் காணாமல்போன 3 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து கிராம மக்களும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கையில், இதுவரை சிறுமி தொடர்பிலான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என...

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய...

அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!

இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இரணைமடு குடிநீர்த் திட்டத்தை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணம் பண்ணைப்...

தடையுத்தரவையும் மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்கிறதாம்!

தடையுத்தரவை மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் , காணிப் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையில் மேற்படி விகாரை அமைப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளில்...

மஹிந்தவின் நகைகள் கறுத்ததாக புகார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு முன்னாள் போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும்...

பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று மாடிக்கட்டடங்கள் – வடக்கு முதல்வர்

கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிப் போன மண்ணில் தான் இன்று மாடிக்கட்டடங்கள் முளைத்துள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மலையாளபுரத்திலுள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தின் கட்டடத்திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. அதில் அதிதியாக...

மக்களுடைய உதவியும், ஒத்துழைப்பும் இருந்தால் தான் போதைப்பொருளை கட்டுப்படுத்தலாம்

வடமாகாணத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து சகல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சிக்கு வியாழக்கிழமை (18) விஜயம் செய்த வடமாகாண முலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம், வடமாகாணத்தில் போதைப்பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசல் இவற்றை இரு பாலாரும் படிக்க வேண்டும்!

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசுதல் இந்த மூன்றையும் ஆண், பெண் இரு சாராரும் படிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அன்றும் இன்றும் உண்மை பேசுதல் பொதுவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முரண்பாடு இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்மை பேசுதல் மிக முக்கியமானதொன்றாக அமைகின்றது. முடிந்த வரையில் உண்மையைப் பேச மாணவ சமுதாயம் முன்வர...

சமுர்த்தி கொடுப்பனவை நிறுத்தியதாக மாற்றுத்திறனாளி பெண் முறைப்பாடு

சமுர்த்தி அலுவலரின் தன்னிச்சையான முடிவு காரணமாக சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகக்கூறி மாற்றுத்திறனாளியான பெண்ணொருவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு வியாழக்கிழமை (17) மனுவொன்றை கையளித்துள்ளார். மனுவின் பிரதிகளை முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ளார். முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழைய...

உயிருக்கு அச்சுறுத்தல்; கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரை அச்சுறுத்தியமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான் நகர் கிராமத்தில் புகையிரத வீதி, மற்றும் ஏ9 வீதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குடியிருப்பு வீதிகள் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து...

கொக்கிளாயில் விஹாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விஹாரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (12) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை (12) முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட...

 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேர் கைது

நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேரை நேற்று வெள்ளிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 2014ஆம்...

கிளிநொச்சியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணைக் காணவில்லை!

கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாந்திமலர் (வயது 48) என்ற பெண்ணை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லையென, அப்பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி நகரிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் வழக்கு விசாரணைக்கு ஒன்றுக்கு வருமாறு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் இதுவரையில்...

துணுக்காய் பிரதேசத்துக்கு சுற்றுலா நீதிமன்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி முதல் புதிதாக சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை நீதிச் சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுலா நீதிமன்றத்தினூடாக மாங்குளம் மற்றும் மல்லாவி ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கான வழக்குகள் மாதத்தில்...

பாடசாலை சமூகத்தால் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த முடியும் – எம்.சிறிதரன்

அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள், குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம். மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகரித்து வரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தால் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசனினால் திறந்து வைக்கப்பட்டது

தமிழர் பிரதேசத்தில் விகாரை; காணி உரிமையாளர்கள் விடுவிப்பு

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரம் இருந்த விகாரை அமைக்கப்படும் காணி உரிமையாளர்கள் மூவரையும் விசாரணை செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். தனியார் காணிகளில் விகாரை அமைக்கப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும்...

சூழல் பாதுகாப்பின் மைய விசையாக மாணவர்கள் செயற்பட வேண்டும் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல்...
Loading posts...

All posts loaded

No more posts