- Friday
- November 21st, 2025
மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் ‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப் பொருளில் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகளால் வடிவமைக்கப்பட்ட கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது. குறித்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,...
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 1999.09.15 அன்று இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் பகுதியில், நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24 பொதுமக்கள் பலியாகியிருந்தனர். வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஏற்பாடு...
மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த சிலர் மது போதையில் அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் மாங்குளம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் அதற்கு...
தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். மேற்படி நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு...
சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி நகரின் மத்தியில்...
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படும் இராணுவ வீரரை, விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்ட, ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்....
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள், மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். வைத்தியசாலை...
யுத்த பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் உட்பட 113 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆளணி விபரங்கள் தொடர்பில் மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அதாவது 19 வைத்திய நிபுணர்கள் தேவையான நிலையில்...
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து தம்மிடம் ஒப்படைக்குமாறுகோரி அவர்களது உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வீதியில் தொடர்ந்து நடத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆலய வீதியை போராட்டம் நடத்த வழங்க முடியாதுள்ளதாகவும் அதற்கான காரணத்தையும் நிர்வாக சபையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்றுக் கடிதம் மூலம் அறிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி...
இரணைத்தீவில் கடற்படையால் சுவீகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் 189 ஏக்கர் காணியை அளந்து மிகவிரைவில் மக்களிடம் கையளிப்பதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “முழங்காவில் கடற்படை முகாமில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் முதற்கட்டமாக...
விசுவமடுவில் நடந்த தீ விபத்துச் சம்பவம் ஒன்றில் 2 அரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் கடையொன்று தீப்பிடித்து எரிந்தது. இரண்டரை வயதுக் குழந்தை உட்பட இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வைபவம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற முறுகல்நிலை வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறுபேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்....
கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் குறித்த கொள்கலனில் எவ்வகையான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தற்போது பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த கொள்கலனை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெற்றுக் கொள்கலன் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து...
கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்திவ் கடன்சுமை என ஆலயப் பூசகரிடம் சென்றவரை செய்வினை அகற்றுவதாக கூறி பூசகர் கொடுத்த மருந்தை அருந்தியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் குறித்த சம்பவத்தில் ஜெயந்திநகரச் சேர்ந்த ஆதித்தகுமார் வயது-50 என்பரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறி்த்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி ஜெயந்தி நகர்ப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கடன் சுமை என ஆலயப்...
யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 200 நாட்களை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இம் மக்கள் இரவு பகலாக...
இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட மலையாளபுரம்...
புதுமாத்தளன் சாலை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களின் படகுகள் மீது தென்பகுதி மீனவர்களின் படகுகள் மோதியதில் புதுமாத்தளன் பிரதேச மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுமாத்தளன் தொடக்கம் சாலை பருத்தித்துறை வரையான கடற்பகுதியில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த மீனவர்கள் சட்டவிரோதமான தொழில்...
ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது. ஒலிபெருக்கியின் சத்தத்தினை...
முல்லைத்தீவு - துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்றன....
Loading posts...
All posts loaded
No more posts
