- Sunday
- May 3rd, 2026
இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த முல்லைத்தீவை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர்...
கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியிலநேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்றுமொரு...
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச்சென்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 10 வயதான கிளிநொச்சி பாரதி வித்தியாலய மாணவியான புவனேஸ்வரன் டிலாணி என்ற சிறுமி...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 672 ஆவது நாளாக கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்...
முறிகண்டிப் பகுதியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன. ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குறித்த கால்நடைகளை மேய்ச்சலிற்காக திறந்து விட்ட நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில்...
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடுகுளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட முறைமைதான் காரணம், இரணைமடு பொறியியலாளர்கள் அதற்கு பொறுப்புகூற வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்தை ஆராய மூவர் அடங்கிய குழுவை வடக்கு ஆளுனர் நேற்று நியமித்துள்ளார். யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் இந்துபுரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ள நீர் கலந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்காக குளோரின் கரைப்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டிற்காக இரு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். குறித்த இருவரும், வீட்டில் தனியாக இருந்த 9 வயது...
கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு...
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மயில்வாகனபுரம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 26.12.2018 நேற்றையதினம் வெள்ள நிவாரணம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்... கடந்த காலங்களில் போரின் நிமித்தம் மோசமாகப் பாதிக்கப்பட்டு அவற்றின் தாக்கங்களில் இருந்து விடுபட முன்னர் இயற்கையின் சீற்றம் மீண்டும் எம்...
கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால், மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் கிளிநொச்சியில் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள், காலநிலை நேற்று ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து வீடுகளுக்கு திருப்பினர். எனினும், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மழை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதனால், ஏற்கனவே...
வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஈரட்டை குளத்தின் வான் பாய்ந்து வருவதனாலும் பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது....
முல்லைத்தீவு கடற்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (புதன்கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையிலேயே குறித்த ஸ்கூட்டர் வகையினைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியுள்ளது. கிழக்கு மாகாண பதிவில் காணப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியமை தொடர்பில்...
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள காமினி சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி- கண்டாவளை பிரதேச...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது. நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு மே...
முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழ தேசிய கொடியான புலிக்கொடி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி மீட்க்கப்பட்டு பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது....
இரணைமடு குளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுனர் பணித்துள்ளார். 1954ம் ஆண்டு இரணைமடு புனரமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த...
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் பாயும் பகுதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போன இளைஞன் சில மணி நேரத் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த என்.டிலக்சன் (வயது-21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் இரணைமடுக் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டன. இடது பக்கம் இரண்டு கதவுகளும்,...
Loading posts...
All posts loaded
No more posts
