- Tuesday
- January 13th, 2026
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள உயிலங்குளம் அ.த.க. பாடசாலைக்கு பான்ட் வாத்தியங்களும்,அலுமாரி,மாணவர்களுக்கான டினபோம் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்பட்டன. வன்னியிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றாகிய உயிலங்குளம் .அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பபொருளாதரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி உதவி...
கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையினை நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் சுரேனை, வடக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர்...
காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை...
நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதந்த இனத்துவக் கற்களுக்கான சர்வதேச நிலையத்தினைச் சேர்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் கேப்பாபிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலவரங்களை கேட்டறிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற...
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல மருத்துவர் ஜெயராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...
போதைப்பொருள் பாவனை தொடர்பாக தகவல் வழங்கிய கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 9 மணிக்கு டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ள கண்டனப் பேரணி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினை சென்றடையவுள்ளது....
வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் மனித உரிமை...
சம்பவமொன்றில் காயமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையளித்தார், இன்னொரு உறுப்பினருக்கு அடைக்கலமளித்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வட்டக்கச்சியை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், ஏற்கனவே பொலிசாரால்...
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். இந்நிலையில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இராணுவத்...
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (18) முற்பகல் இரணைமடு நீர்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது, இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான செயற்திட்ட முன்மொழிவை தன்னிடம் சமர்ப்பிக்கும்படி, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்என்.சுதாகரனிற்கு உத்தரவிட்டுள்ளார். இது...
இரணைமடுக்குளம் மீண்டும் எல்லோரினதும் பேசுபொருளாக ஆகியுள்ளது. கொழும்பு அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நேரமொதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கிளிநொச்சி வந்து இரணைமடுவின் வான்கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார். வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிடவந்த நீர்ப்பாசன அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் இனிமேலும் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தைக்...
இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி முல்லைத்தீவு மக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அலம்பிலில் நில அளவீட்டிற்கு சென்ற அதிகாரிகள் பிரதேச மக்களின் எதிர்ப்பினையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் தனியார் காணியில், ஒரு பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ளதுடன், காணியின் மற்றுமொரு பகுதியில் இராணுவ முகாம் காணப்படுகின்றது. இந்நிலையில், குறித்த காணியை இராணுவத்திற்கு...
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா என கேள்வியெழுந்துள்ள நிலையில் அதனை ஆராய்வதற்கு புதிய விசாரணைக்குழுவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார். கிளிநொச்சியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் கள நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த...
இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த முல்லைத்தீவை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர்...
கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியிலநேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்றுமொரு...
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச்சென்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 10 வயதான கிளிநொச்சி பாரதி வித்தியாலய மாணவியான புவனேஸ்வரன் டிலாணி என்ற சிறுமி...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 672 ஆவது நாளாக கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்...
முறிகண்டிப் பகுதியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன. ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குறித்த கால்நடைகளை மேய்ச்சலிற்காக திறந்து விட்ட நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில்...
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடுகுளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட முறைமைதான் காரணம், இரணைமடு பொறியியலாளர்கள் அதற்கு பொறுப்புகூற வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்தை ஆராய மூவர் அடங்கிய குழுவை வடக்கு ஆளுனர் நேற்று நியமித்துள்ளார். யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண...
Loading posts...
All posts loaded
No more posts
