யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – அஜித் ரோஹண!

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு... Read more »

நாட்டில் இன்சுலின் பற்றாக்குறை!!

தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜெயந்த பண்டார, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்சுலின் பயன்படுத்தப்படுகின்றது... Read more »

உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள்!! சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன்

“உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள். வழிபாடுதான் இன்று அனைவருக்கும் மன வலிமைதரும். மருத்துவ உலகின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து , அனைவரும் நோய் பரவாது காக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குங்கள்” இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும்,தெல்லிப்பழைஶ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன்... Read more »

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை – எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி பணம் மீளப்பெற முடியும்

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் நாளை நடமாடு வங்கிச் சேவையை நடத்த உள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை அறிவித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை வழங்கப்படவுள்ளது என்று தேசிய... Read more »

யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் பரிசுத்தவார வழிபாடுகள் நேரலை ஒளிபரப்பு!!

நாட்டின் தற்போதைய சூழலில் மக்கள் ஒன்றுகூடமுடியாமை மற்றும் ஊரடங்கு காரணமாக இம்முறை பரிசுத்த வார, ஈஸ்டர் வழிபாடுகள் யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளன. இந்த வழிபாடுகளில் ஆயர் இல்லத்தில் வசிக்கும் குருக்கள்... Read more »

இலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என குறித்த... Read more »

யாழ். மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ்... Read more »

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கோரோனா; அவர் பயணித்த விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்

மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை தந்த அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியும் கோரனா பரவலைக் கட்டுப்பாட்டுத்தும் செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். மலேசியாவிலிருந்து மார்ச்... Read more »

நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா: வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் குறிப்பிடுகையில், “இன்று நாட்டிற்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும்... Read more »

ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி

ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது. இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச்... Read more »

ஊரடங்கு சட்டம் பற்றிய ஜனாதிபதி செயலகத்தின் அறிவித்தல்!!

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம்... Read more »

வடக்கு மக்களை பாதுகாக்க 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் உயிரையும் பணயம் வைத்து சேவையில்!! – பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு கோரிக்கை

“கோவிட் – 19 நோய்த்தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வடமாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள்... Read more »

கோரோனா பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் – வீடியோக்களைப் பார்வையிடுவது ஆபத்து!!

அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்த நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக... Read more »

பிறப்பு – இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.. இந்த விடயங்கள் தொடர்பாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டள்ள ஊடக... Read more »

கண், மூக்கு, தொண்டை – சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள்

கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் பலவற்றை வழங்கியுள்ளனர். கொரோனா-வைரஸ் பரவியுள்ள காலகட்டத்தில் பொதுமக்களையும், குறிப்பாக பிள்ளைகளையும், முறையாக பாதுகாப்பது இதன் நோக்கமாகும். மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் கொவிட்-நைன்ரீன் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காரணமாக, மருத்துவமனைகளில் ENT சிகிச்சை... Read more »

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது – நோபல் பரிசு விஞ்ஞானி மைக்கேல் லெவிட்

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விஞ்ஞானி மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும்... Read more »

மார்ச் 10ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பியோரை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல் – தவறின் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை

மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்த அனைவரையும் நாளை முதலாம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். பதிவு செய்யாமல் மறைந்திருந்தை தொடர்பில் கண்டறியப்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்... Read more »

வடக்கில் கொரோனா தொடர்பான அறிவித்தல்களுக்கு புதிய அழைப்பு எண்கள்!

கொரோனா தொற்றுநோய் தொடர்பான விபரங்கள் மற்றும் அறிவித்தல்களுக்காக வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி அழைப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 021-2217982 மற்றும் 021-2226666 ஆகிய தொலைபேசி இலக்கங்க்ள அறிடுகப்படுத்தப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில்... Read more »

வீட்டில் தங்கியிருப்பதுபோல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்

கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் மாத்திரமின்றி பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆயூதங்களை பயன்படுத்தி மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. மக்கள் நலத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் ஒரு கட்ட நடவடிக்கை. இதன்... Read more »

கோரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 27 வரை ஊரடங்கு அவசியம்!!

நாட்டில் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏப்ரல் 27ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். “கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம்... Read more »