- Wednesday
- May 7th, 2025

கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில்...

யாழ்ப்பாணம் வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் உட்பட மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.குறித்த வைரவர் கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். (more…)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களை நாளை தங்கள் கடமைகளை பொறுப்பேற்குமாறு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.யாழ். மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆயிரம் பேர் வரையில் பட்டதாரிப் பயிலுநர்களாக சகல பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் மாவட்ட செயலகங்கள் தோறும் நியமிக்கப்பட்டனர். (more…)

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யவும் எம்முடன் ஒன்றுபடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். (more…)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதிலும், ஆளும் கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்திருப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் ஆளும் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபை அமைப்பது தொடர்பில் ஆளும் கட்சி சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம். (more…)

என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை எந்தவிதத்திலாவது...

வாள்களுடன் ஆட்டோக்களில் வந்த நபர்கள் இளம் குடும்பஸ்தர் ஒருவரைச் சினிமாப் படப் பாணியில் பலர் முன்னிலையில் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்து விட்டு மறைந்தனர்.இதன் போது மேலும் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடாநாட்டை பரபரப்பில் ஆழ்த்திய இந்தச்சம் பவம் திருநெல்வேலி சிவன் அம்மன் கோயிலுக்கு முன்னால் நேற்றுப்...

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலதிக ஆசனங்கள் இரண்டு உட்பட 14 ஆசனங்கனை கைப்பற்றியுள்ளன. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய...

க.பொ.த. (உயர்தர) பரீட்சை விடைத்தாள் புள்ளியிடும் பணிகள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மேற்பார்வையின்றி நடைபெறும் என உயர்கல்வி அமைச்சும் கல்வி அமைச்சும் கூறுகின்ற போதிலும், பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்வரை ஆசிரியர்கள் புள்ளியிடும் கடமையில் ஈடுபட மாட்டார்கள் என ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன. (more…)

ஏனைய மாவட்டங்களில் பட்டதாரி பயிலுநர்கள் நியமனத்துக்கான உயர் தேசிய டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது. (more…)

யாழ். நெல்லியடிப் பகுதியில் புலிக்கொடி காட்டிய விவகாரம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இங்கு இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கும் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 108 உறுப்பினர் தெரிவிற்காக...

எந்தவொரு சூழ்நிலையிலும் எழுத்து மூலமான உறுதிமொழியின்றி தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடத் தயாரில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் நிர்மால் ராஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி அளிப்பதாக செய்யப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை.இரண்டு மாதங்களாக சம்பளம் பெற்றுக் கொள்ளாத காரணத்தினால் சில விரிவுரையாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி...

செப்ரம்பர் மாதம் 7ம் 8ம் திகதிகளில் இரு நாட்களைக் கொண்ட மாபெரும் துடுப்பாட்ட சமர் ஆனந்தாக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், ஆனந்தாக் கல்லூரியின் புகழ்பெற்ற ஆசிரியரும், பகுதித் தலைவருமான திரு.சிவகுருநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக இச்சமர் இடம் பெறுகிறது. (more…)

கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட பகுதிகளில் அரச காணியில் வசித்து வருகின்ற 286 குடும்பங்களுக்கு காணி உரிமப் பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த 286 குடும்பங்களுக்கும் காணி உரிமைப் பத்திரம் வழங்குவதற்கு அனுமதிபெறப்பட்டுள்ளதையடுத்து விரைவில் அவர்களுக்குரிய காணி உரிமப்பத்திரம் வழங்குவதற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை...
சம்பள வீதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், போக்குவரத்து மற்றும் ஏனைய விசேட படிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாம் விரைவில் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.அரச சேவையில் மருத்துவ வாண்மையாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக, அவர்களின் சம்பளம் மற்றும் படிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல வருடங்களாக தான் கோரி வருவதாகவும் ஆனால் அக்கோரிக்கைகள்...

2011 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் திருத்தப்பட்ட தேசிய மற்றும் மாவட்ட மட்ட தரவரிசை பட்டியல் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக இதனை பார்வையிடலாமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி...

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தென்னிலங்கையைச் சேர்ந்த தாதியர்களின் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள விடுதிக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்து தாக்கியதில் ஒருவர் கையில் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரத்து 295 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 116 பேர் இன்னமும் மீளக் குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக வேறு இடங்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் உள்ளனர் என யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த மாதம் 31 ஆம் திகதி வரையான...

All posts loaded
No more posts