Ad Widget

ஆளும் கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்திருப்போம்: ஹக்கீம்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதிலும், ஆளும் கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்திருப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் ஆளும் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபை அமைப்பது தொடர்பில் ஆளும் கட்சி சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம்.

ஆளும் கட்சி நாடளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகக் காரியாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

2ம் இணைப்பு

மேற்படி கூட்டம் குறித்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவிக்கையில்,

எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை அற்ற நிலையில் முடிவுற்ற தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இரவு அது தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தமது கருத்தினை தெரிவித்துள்ளார்.

நேற்றைய கூட்டத்தில் முழுதாக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தே பேசப்பட்டதாகவும், போனஸ் ஆசனங்கள் குறித்தோ ஆட்சி அமைக்கும் பட்சத்தில் யார் முதல்வர் என்பது குறித்தோ பேசப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

அமைச்சர் பஷில் ராஜபக்ச வெளிநாடு சென்றிருப்பதால் அவர் வருகை தந்தவுடன் மாகாண சபைக்கான தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகள் எட்டப்படும் என்று பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி வினவியபோது அது தொடர்பில் முடிவேதும் இல்லை எனினும் சாதகாமான சமிக்ஞையாக நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டம் ஒன்றில் மு. கா. தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹகீம், தாங்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டே போட்டியிட்டதாகவும் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினார்.

முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட போது. அதை அரசு அவதானித்து வருவதாகவும், அவ்வாறான நிலை ஏற்படின் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசுடன் இணைந்து மு.கா. கிழக்கில் ஆட்சியமைத்தால் அது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகம்! அஷாத் சாலி

அரசாங்கத்தோடு இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான அஷாத் சாலி தெரிவித்தார்.

முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அஷாத் சாலி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த ௭திர்ப்பை இத்தேர்தலில் வெளியிட்டுள்ளனர். வாக்குகளில் அரசாங்கம் பின்னடைவை கண்டுள்ளது.

௭னவே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மீறி செயற்பட முடியாது.

மறைந்த தலைவர் அஷ்ரப் சொன்னது போல் நடந்தவற்றை மறப்போம் ௭ன்ற கொள்கையை கடைப்பிடிப்போம்.

௭னவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைப்போம். இதன்மூலம் இருதரப்பினரும் இணைந்து செயற்பட முடியும் ௭ன்பதை உலகிற்கு நிரூபிப்போம்.

இவ்வாறு இணைந்தால் அரசாங்கத்தின் உதவியின்றி ௭ம்மால் மாகாண சபையை நடத்த முடியும். வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உதவிகளை பெற முடியும்.

இச் சந்தர்ப்பத்தை கைநழுவவிடக் கூடாது. விரும்பியோ விரும்பாமலோ இத்தீர்மானத்தையே நாம் ௭டுக்க வேண்டும்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிவிட்டு கொள்கைக்காக முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பையேற்று தேர்தலில் போட்டியிட்டேன்.

கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ௭னவே அம்மக்களின் அபிலாஷைகளை மீறலாகாது.

முதலமைச்சர் பதவி தொடர்பாக பேசித் தீர்க்கலாம் ௭ன்ற நிலைப்பாட்டிற்கும் கூட்டமைப்பு வந்துள்ளது.

௭னவே இணைந்து ஆட்சியமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் பெரிய துரோகமாக அமைந்துவிடும் ௭ன்றார்.

Related Posts