சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டி அபகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு,வளலாய் பகுதியில் வைத்து சாரதியை தாக்கி, முச்சக்கரவண்டியினை அபகரித்துச் சென்றுள்ளதாக,அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர். வளலாய் பகுதியில் முச்சக்கரவண்டி...

அமெரிக்காவில் பாலியல் குற்றம்: முன்னாள் மேஜர் திருப்பி அனுப்பிவைப்பு

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார். பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு அவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளார். ஐ.அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்துக்குப் பயிற்சிக்காகச் சென்ற அவர், அங்கு தங்கியிருந்த ஹொட்டலிலேயே, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. இயந்திரப் பராமரிப்பாளரான குறித்த பெண், குறித்த...
Ad Widget

பல்கலைக்கழக அனுமதிக்காக 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

2016/2017 பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2016/2017 பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இன்றுடன் நிறைவு பெறுகின்றது. 2016/2017 பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் ஊடாக மாணவர்கள் தற்போது தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துவருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார். இதேவேளை,...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டில் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பொழியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை மற்றும் இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ , மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில்...

பேராதனை பல்கலை மாணவர்கள் 15 பேர் கைது

பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​ ​ இன்று அதிகாலை 01.00 மணியளவில் குறித்த சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ​ ​ பேராதனை - கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேருக்கு,...

ஈழத்து மண்ணில் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் விபத்தில் மரணம்!

பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் என தெரியவந்துள்ளது. யாழ். நகரைச் சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், சஞ்சீவ் தன் ‘‘Drone Camera’’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ என்ற தலைப்பில் யாழ். மண்ணின் அழகைப் படம்பிடித்து...

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்! 4 பேர் படுகாயம் 6 பேர் கைது!

யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர், பல்கலைக்கு வெளியில் தங்கி தமது கல்வியை...

வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு!

வவுனியா மாவட்டம் – கோதண்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கோபு என்றழைக்கப்படும் இலங்கைநாதன் இளங்கோவன் (வயது – 31) என்ற குறித்த முன்னாள் போராளி, தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொலையா,...

வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மாரடைப்பு!

நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெஞ்சுவலி; காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர், தற்போது இருதய சத்திர...

அறிவித்தல் பலகையில் மாற்றம்

கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்னால், வீமானப்படையினரால் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகையில், “விமானப்படையின் காணி, அதனை மீறி உட்சென்றால் சுடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை (18) இரவோடிரவாக அந்த அறிவித்தல் பலகை மாற்றப்பட்டு, “இது விமானப்படையின் காணி,தேவையில்லாமல் உட் செல்லத் தடை” என்றும் எழுதப்பட்டு புதிய அறிவித்தல் பலகையொன்று போடப்பட்டுள்ளது.

மழை இல்லாவிட்டால் மின்சாரம் இல்லை

ஏப்ரல் 21ஆம் திகதிவரை மழை பெய்யாவிட்டால் நீர் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என, மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சன் சியம்பலாபிட்டிய ​தெரிவித்துள்ளார். அத்துடன், மே மாத இறுதியாகும்போது, கடும் வரட்சி நிலை ஏற்பட்டால் குடி நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீயில் எரிந்து இரண்டு வர்த்தக நிலையங்கள் நாசம்

புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளன. சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, தீ பாரியளவில் பரவிச் செல்வது தடுக்கப்பட்டது....

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகள்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக...

பாடசாலைகளை கவனயீர்ப்புக்கு அழைப்பு!

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என கோரி, வடமாகாணம் முழுவதும் நாளை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மாணவர்கள் பாடசாலை வாசலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு, வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்

'ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்" என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில், ஜனநாயக வழிகளில் அரசாங்கப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட...

வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய...

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகின.

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் : மனித உரிமை கண்காணிப்பகம்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் மற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என மனத உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விடயத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய பணிப்பாளர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்னமும்...

38 வகை கண் வில்லைகளின் விலைகள் குறைப்பு; புகையிலை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 38 வகையான கண் வில்லைகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். கண் வில்லைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதனால் கண் சத்திர சிகிச்சைக்கான விலைகளும் பெருமளவில் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் வலியுறுத்தினார் சுமந்திரன்

திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது "ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது...
Loading posts...

All posts loaded

No more posts