அபராத தொகையை செலுத்தியவர் மயங்கி விழுந்தார்

டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன், நேற்று (20) உத்தரவிட்டார். தாவடிப் பகுதியில் டெங்கு பரவ கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, திங்கட்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....

கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம்!

கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
Ad Widget

ததேகூவை சந்தித்த ஜெய்சங்கர்

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில்...

யாழ். நகரப்பகுதியில் துணிகரமாக நடமாடும் வாள்வெட்டு கும்பல்!

யாழ். நகரப்பகுதியில் நேற்றிரவு துணிகரமானமுறையில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யாழ். மாவட்டத்தில் பரவலாக வாள்வெட்டுக்குழுக்கள் நடமாடிவருகின்ற நிலையில் ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றது. நேற்று மாலை யாழ். கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்குழுக்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டன. அதேவேளை நேற்று மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதி வேம்படி மகளிர் கல்லூரிக்கு...

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில்!

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்றது. 2012ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை நிறைவு செய்து பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கான உரிய வேலைகள் கிடைக்காததை கண்டித்தும், தொண்டர்...

தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர்வோம்’ காணாமல் போனோரின் உறவினர்கள்

தமிழர் தாயத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் சற்றுமுன் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு, ஐ.நா. மனித உரிமை பேரவையினால் உரிய தீர்வு...

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டம்!

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள்...

சிக்கலில் கமல்ஹாசனின் `சபாஷ்நாயுடு’?

`விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவலை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதில் `விஸ்வரூபம் 2' படத்தின் தடையாக இருந்த முக்கிய பிரச்சனைகள் நீங்கிவிட்டதாகவும், தொழிநுட்ப மற்றும் சட்டரீதியான சவால்களை மட்டுமே சமாளிக்க வேண்டி உள்ளது. எனவே படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் துவங்கி 6 மாதத்தில்...

கமல், அரசியலில் குதிப்பாரா? ரஜினிகாந்த் மவுனம்!

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு ரஜினியும், கமலும் தமிழ் திரைஉலகில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற கோ‌ஷம் நீண்ட காலமாகவே அவரது ரசிகர்கள் மத்தியில் பிரதானமாக இருந்து வருகிறது. “தலைவா வா... தமிழகத்துக்கு தலைமையேற்க வா” என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும்...

நடிகை பாவனாவை கடத்த ரூ.30 லட்சம் பேரம்: சிக்கும் 6 சினிமா பிரபலங்கள்

தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, டிரைவர் நிறுத்தினார். அப்போது இன்னொரு காரில்...

ரி.20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

அவுஸ்திரேலியாவுடன் ரி.20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி இலங்கைக்கு புகழைத் தேடித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தொடரில் சிறந்து விளங்கிய அசேல குணரத்னவுக்கும் ஜனாதிபதி தனது விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்க காணாமல் போனோர் தொடர் போராட்டம்

தமிழர் தாயகத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மற்றும் யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்தக் கோரியும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு ஐ.நா. இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாதெனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின்...

ஐ.பி.எல். தொடரில் டோனிக்கு ஏற்பட்ட நிலை

இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், பூனே சுப்பர் ஜயன் அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது பூனே அணிக்கு தலைமை வகித்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தலைமை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற...

அதிரடியால் அசத்திய அசேல குணரத்ன : தொடரை கைப்பற்றியது இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி பந்தில்...

கேப்பாபுலவில் இராணுவத்தின் எச்சரிக்கை பெயர்ப் பலகையில் மீண்டும் மாற்றம்!

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு...

சைட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் ஊவா மாகாணத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என...

நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்த மாணவர்கள்

கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க கோரி வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை பாடசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் மக்களின் காணிகளை மக்களிடம் கொடு, அரசே எங்களின் நிலத்தை எங்களுக்கு விட்டு விடு, அரசே நில ஆக்கிரமிப்பின் மூலம் மாணவாகளின் கல்வியை பாழாக்காதே, காணிக்காக போராடும் மக்ளுக்கு தீர்வை வழங்கு, எதிர்க்கட்சித்தலைவர் 2016 ஏமாற்றப்பட்ட...

தீர்வின்றி தொடரும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு...

வடமராட்சி கிழக்கு கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அட்டகாசம்!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய றோலர் படகுகள், கட்டைக்காடு, ஆழியவளை பகுதி மீனவர்களின் வலைகளை அறுத்தெடுத்துச் சென்றுள்ளதாக கட்டைக்காடு மீனவ சங்கத்தினரால், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்பரப்பில் போடப்பட்டிருந்த வலைகளே இவ்வாறு அறுத்தெடுத்து செல்லப்பட்டுள்ளதாக கட்டடைக்காடு மீனவ சங்க தலைவர் தெரிவித்தார். வலைகள் அறுத்தெடுத்துச்...

சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டி அபகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு,வளலாய் பகுதியில் வைத்து சாரதியை தாக்கி, முச்சக்கரவண்டியினை அபகரித்துச் சென்றுள்ளதாக,அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர். வளலாய் பகுதியில் முச்சக்கரவண்டி...
Loading posts...

All posts loaded

No more posts