- Saturday
- June 13th, 2026
2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பிக்கப்படுகின்றது. அதற்கமைய, வாக்காளர் திருத்தத்திற்கான படிவங்களை நேற்றுமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் குறித்த படிவங்கள் கிராம சேவை உத்தியோகஸ்தர்களூடாக மீள சேகரிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். மாவட்டப் பிராந்தியக் காரியாலயத்தில் நேற்று (15) முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட...
வவுனியா - புதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் நேற்று (15) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான கண்டி வீதிக்கு மணல் ஏற்றிச்சென்ற...
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று போதனா வைத்தியசாலையாக மாற்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அரசுடைமையாக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நேற்ற (திங்கட்கிழமை) குறித்த...
இலங்கையில் தற்போது ஆட்சி செய்துவரும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவி தேவையென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கைக்க பயணம் மேற்கொண்ட நரேந்திரமோடியை கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோதே தான் இவ்வாறு கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சம்பந்தன்...
இரட்டை பிரஜாவுரிமை கொண்ட யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் 6 பேரிடம் இரட்டை பிரஜாவுரிமை உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்” என்றும் அண்மையில் சிங்கள ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள்...
காலி மாவட்டச் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிய சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது. உலகெங்கிலும் கடந்த வாரம் 99 நாடுகளின் இணையத்தளங்கள்மீது ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், சிறிலங்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்விணையத்தளத்துக்குள் ஊடுருவிய இணைய ஊடுருவிகள், பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள்...
இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்...
அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) - 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம்திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. அனைத்து...
வடமாகாண வலசைப் பறவைகள் தினம் அடுத்த ஆண்டில் இருந்து பெப்ரவரி மாதத்தின் இடண்டாவது வார இறுதி நாட்களில் கொண்டாடப்படவுள்ளதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சால் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை...
யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவரைத் துரத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. வாளுடன் வந்த இருவரும் நகரில் சாதாரணமாக நடமாடினர். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளிலேயே அவர்கள் வாளுடன்...
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள பிரபல விருந்தினர் விடுதியொன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு காவல்துறை அதிகாரிகளும் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததும் பழைய பகை இருவருக்கிடையில் வாய்த் தர்க்கமாக மாறி கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இதனை அவதானித்த குறித்த விடுதி உரிமையாளர் இருவரையும் காவல்துறை நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண...
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் இணைந்து சிலர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதும், இராணுவத்தினரை விமர்சிப்பதும் கவலையளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே...
“வடக்கின் முக்கிய பதவிகளை வகிக்கும் இரு விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவரின் கைகளில்தான் உள்ளன” என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 8ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.விக்னேஸ்வரனுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி போராட்டம் இன்று மாலைவரை முன்னெடுக்கப்படுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும்’, ‘மாணவியின் நீதி...
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...
கடந்த மார்ச் மாதம் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் ஆபாச படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு வெளியாகும் படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா கூறி வந்தார். பின்னர் தனது டுவிட்டர்...
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி...
ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு வரி சலுகைகளை வழங்க நிதி அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பொதுக் கணக்குகள் மேற்பார்வைக் குழுவால் தடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் 26 பேருக்கு வாகன இறக்குமதிக்கான வரி நிவாரணம் வழங்கும் சட்டமூலம் ஒன்றை, சுங்கத்துறை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சு தயாரித்து நாடாளுமன்ற அனுமதிக்காக அனுப்பி...
கேப்பாபிலவு இராணுவ முகாமினை மாற்றுவதற்காக இராணுவம் கோரியிருந்த 5 மில்லியன் ரூபாவினைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற...
Loading posts...
All posts loaded
No more posts
