Ad Widget

நிதி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்தார் சுமந்திரன்!

ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு வரி சலுகைகளை வழங்க நிதி அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பொதுக் கணக்குகள் மேற்பார்வைக் குழுவால் தடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 26 பேருக்கு வாகன இறக்குமதிக்கான வரி நிவாரணம் வழங்கும் சட்டமூலம் ஒன்றை, சுங்கத்துறை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சு தயாரித்து நாடாளுமன்ற அனுமதிக்காக அனுப்பி வைத்திருந்தது.

இதனை ஆராய்ந்த, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான பொதுக் கணக்கு குழு, குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என பாராளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் இத்தகைய வரிச் சலுகை வழங்குவதென்பது எனையவர்களுக்கு அநீதி ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட இந்த அதிஷ்டசாலிகள் யார் என்பதையும் அவர்கள் எந்த அடிப்படையில் இந்தச் சலுகையை பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதையும் நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த வரி சலுகைகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்கு 104 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts