Ad Widget

கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க இராணுவத்திற்கு 5 மில்லியன்: சுவாமிநாதன்

கேப்பாபிலவு இராணுவ முகாமினை மாற்றுவதற்காக இராணுவம் கோரியிருந்த 5 மில்லியன் ரூபாவினைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி முகாமினை அகற்றுவதற்கு இராணுவம் 5 மில்லியன் ரூபாவினைக் கேட்டிருந்தது. அதனடிப்படையில் தற்போது குறித்த பணம் கையளிக்கப்பட்டதால் விரைவில் கேப்பாபிலவு காணிகள் விடுவிக்கப்படும்.

இதேவேளை காணிகள் விரைவாக விடுவிப்பது குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவைச் சந்திக்க உள்ளேன். ஏற்கனவே நாம் கூறியபடி முள்ளிக்குளம் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன” என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts