நாவற்குழியில் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது!

நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர். தென்மராட்சி நாவற்குழியில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தெற்கில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட சிங்களமக்கள் அரசகாணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் வழிபாட்டுக்காக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு விகாரைக்கான தாதுகோபத்தை அமைப்பதற்கு கடந்தவாரம் அடிக்கல்...

‘கடைக்குச் சென்ற என் அம்மா எங்கே?’

முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று (14) 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....
Ad Widget

‘அமெரிக்காவின் அழுத்தம் வேண்டும்’ : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

ஜெனீவா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை, சர்வதேச அரசாங்கங்கள் வழங்க வேண்டுமென, ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரான பில் ஜோன்சனிடம் வலியுறுத்தியுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பில் ஜோன்சன், ஐ.அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று (14) சந்தித்துக் கலந்துரையாடினர்....

வரட்சியால் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள்,...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சரின் வேண்டுகோள்

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அனைத்து வடகிழக்கு தமிழ் மக்களும் 3 நிமிட மௌன அஞ்சலியை அனுஷ்டிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஸ்டிக்கப்படவிருக்கின்றதாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு...

WannaCry மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கை

அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்: - Update Windows Patches - விண்டோஸ் பெச்சஸ்களை மேம்படுத்திக்கொள்ளவும். - Backup all documents...

இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு போராடியவர்கள் கைது

இலங்கைக்கு செல்லக் கூடாது எனக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும் நோர்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துகின்றனர்....

உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.05.2017) வரை நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 108 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் வெளிக்களப் பயிற்சியின்போது பறவை அவதானிப்பில் ஈடுபடுவதைப்...

இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும்

இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... எதிர்வரும் மே 18ஆம் நாள் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 8ஆவது ஆண்டு நினைவுநாளாகும். இவ் இனவழிப்பு நாளை நினைவு கூர...

இலங்கைக்கு போகவேண்டாம்: இசைஞானியின் வீடு முற்றுகையிடப்படும்

இலங்கையில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் நாளை (14) நடைபெறும் என்று, இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

மே 18ஆம் திகதி டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களை அச்சுறுத்த இடமளியோம்: சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி, டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் வீடு வீடாக சென்று பொலிஸாரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது என வட. மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மே மாதம் 18ஆம் திகதி மத்திய அரசினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில்...

பொருத்து வீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவோம் : முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண சபையின் கோரிக்கையை புறந்தள்ளி மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு, வட மாகாண சபை எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (12) முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடக்கு மாகாண மக்களுக்கு என 6 ஆயிரம் பொருத்து...

கிளிநொச்சியில் 83வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்!

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 83வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே...

அவுஸ்திரேலியாவுக்கான சகல வீசா கட்டணங்களும் அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவுக்கான வீசாக் கட்டணம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தினால் புதிய வீசா கட்டணம் தொடர்பான பட்டியல் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 2017/18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு...

மஹிந்த, கோத்தபாய மோடியை சந்தித்தது பேசிய விடயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்....

ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று!

ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் வரமராட்சி, பொலிகண்டி- ஊறணி பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 1985ஆம் ஆண்டு இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு, குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட 50இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மே 12ஆம் திகதிமுதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால்...

ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை தாதா மகன்! திரையுலகில் பெரும் பரபரப்பு!!

மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தாரவி பகுதியை மையாக...

உண்மை சம்பவத்தை இயக்குகிறார் சுதா

இறுதிச்சுற்று படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் சுதா கொங்கரா. தற்போது தெலுங்கில் இறுதிசுற்றான குருவையும் முடித்து விட்டார். தற்போது அடுத்த தமிழ் படத்திற்கான வேலைகளை துவங்கி உள்ளார். அடுத்து சுதா இயக்கப்போகும் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திகில் படம். இதில் விஜய்சேதுபதி நடிக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி சுதா கொங்கரா கூறியதாவது:...

விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு விருந்து

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதேநோளில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம் கூட்டமைப்பிடம் மோடி

இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை 6மணியளவில் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,...
Loading posts...

All posts loaded

No more posts