ஜனாதிபதியின் செயலால் தொடர் ஏமாற்றத்துடன் யாழ். உறவுகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி வந்திருந்த நிலையில், அவரின் வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ். விஜயம் செய்த ஜனாதிபதி, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சார்பில்...

வியாபாரிகளுக்கான காலாண்டு வரி அறவிட நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில், வருடம் ஒன்றுக்கு, 12 மில்லியன் ரூபாய் வரையில் வியாபாரத்தை மேற்கொள்ளும் நபர்களின் காலாண்டு வரி அறவிடுதல் தொடர்பான ஆரம்பக் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதிப் பிரதம செயலாளரின் நிதிப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரி என்பது மக்களின் தேவைகளை முழுமை செய்யும்...
Ad Widget

இலங்கையின் சுதந்திரக்கிண்ணம் இந்தியாவிடம்!

இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு பந்தில் 6 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுகளத்தில் இருந்த டினேஷ் கார்த்திக் அந்த ஒரு பந்தை எதிர்கொண்டு 6...

யாழில் அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பு!

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த தமிழ் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். சுழிபுரம் வலி மேற்கு பிரதேசசபை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையினை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வடக்கு கிழக்கை எதற்காக இணைக்கக் கோருகிறோம்? – முதலமைச்சர்

வடக்கையும் கிழக்கையும் பிரித்துவைக்கும் நிலை தொடர்ந்தால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராகக்கப்படுவார்கள் என வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலை மாறி, வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை...

தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல முயற்சித்த மகள் : தாயாரின் இறுதிச் சடங்கில் நெகிழ்ச்சித் தருணம்!

தாயாரின் இறுதிச் சடங்கிற்கு அழைத்துவரப்பட்டிருந்த அரசியல் கைதியான தனது தந்தையுடன் சிறைச்சாலைக்கு செல்ல மகள் முயற்சித்தமையானது அனைவரது மனதையும் நெகிழவைத்துள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்த ஆனந்தசுதாகர் யோகராணியின் இறுதிச் சடங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மருதநகரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் மனையிவியின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்வதற்காக ...

இராணுவத்தின் பிக்கப் மோதி ஒருவர் பலி!!

பளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்....

மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் : டக்ளஸ் தேவானந்தா

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 38 சபைகளில் போட்டியிட்டு 98 ஆசனங்களை பெற்று எமது அரசியல் பலத்தை இதர தமிழ் அரசியல் தரப்பினருக்கும் தென்னிலங்கைக்கும் மக்கள் எம்மீது வைத்துள்ள உறுதிப்பாட்டின் வலிமையை வெளிப்படுத்திக் காட்டியுள்து என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

யாழில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற பொலிஸார்!!!

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை...

யுத்த பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய சாலைப்பூக்கள்

யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது என படத்தின் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர்...

தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்....

கிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை!!

நேற்று முன்தினம் (15) இரவு வேளையில் கிளிநொச்சி, முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது. முரசுமோட்டை சிவா சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல விக்கிரகமான வேல் முறிக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் சோதனை இடப்பட்டுள்ளது. அத்துடன் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயக்...

பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: இருவர் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மற்றய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (16) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது இச் சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியினை சேர்ந்த...

கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’

கிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன. நேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமையைக் கூட மறக்கும் வகையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள், வாக்குவாதம், சர்ச்சைகள்...

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றபோதே, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட...

ஆணைக்குழுவின் கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது. வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 18ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு செல்லுமாறு பல்கலைக்கழக மானியங்கள்...

பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி...

சுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை : இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் – இந்தியா

சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான நேற்றய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (17) கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்...

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் கலந்துரையாடல்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Loading posts...

All posts loaded

No more posts