- Wednesday
- May 13th, 2026
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குடும்ப நிலையையும் குறிப்பாக அவருடைய சிறிய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஐனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த சுதாகரன் கடந்த 2008 ம் ஆண்டு தொடக்கம் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில...
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும்,நிரந்தர நியமனம் கிடைக்காத மன விரக்தியில் நேற்று மாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் முல்லைத்தீவு மாடவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பன்னங்கண்டிபிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டினருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த வெடிக்காத நிலையில் குண்டு அவதானிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து 4 அடி ஆழத்தில்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் சிங்கள பிரதிநிதிகளுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. புலம்பெயர் சிங்கள அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த அமர்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கை மக்களுக்கு எதிராவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய சிங்கள பிரதிநிதிகள், உலக சாசனத்தின் 23/1ஐ...
வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற...
காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என, சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்தார். எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார் என்று ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான...
அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுதலை செய்யுமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றினை நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்தவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் அவர்களின் மனைவியின் இறுதிக் கிரியை கடந்த 18ம்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் வழங்கப்படும் நட்ட ஈடுகளை முன்னாள் போராளிகளும் பெற முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 23/2 நியதிக் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,...
தமது கோரிக்கைகளுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 21 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் சகல பல்கலைக்கழகங்களினதும் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நிலையில், இவர்களுக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி அமைச்சு நேற்று குறிப்பிட்டிருந்தது....
தமிழ்மக்கள் தனக்குச்செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவில்லை என்றும் அதன்காரணமாகவே தமிழர் பிரதேசங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொள்வதாகவும் நேற்றையதினம் (19-03-2018) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது உரையின்போது தெரிவித்திருக்கிறார். ஆனால், தமிழ்மக்களின் செய்ந்நன்றியை மறக்கவில்லை என்று சொல்லும் ஜனாதிபதி அவர்கள் அதற்கான பிரதியுபகாரங்களை இதுவரையில் தமிழ்மக்களுக்குச் செய்யவேயில்லை. அவரது வருகை மட்டுமே...
வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் 10 பேர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்கி...
காணாமல் ஆக்கப்பட்ட எமது கல்லூரி அதிபர் தொடர்பில் கேட்காது கல்லூரிக்கு நீச்சல் தடாகம் அமைத்து தருமாறு கல்லூரி நிர்வாகம் கோரியது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக போராடத்தில் ஈடுபட்ட புனித பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட...
இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினைநேற்று (19) திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில்...
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் தத்தமது அடையாளங்களுடன் சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க வேண்டுமாயின் இணைப்பு மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,...
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளேனும் தமிழ் மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இலங்கையின் பிரச்சினைகளுக்கு...
ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை பெற்ற சபைகளின் செயற்பாடுகள் இன்று 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உள்ளு10ராட்சி மன்ற ஆணையத்தின் அறிவிப்புக்கு இணங்க இன்றையதினம் குறித்த சபையின் புதிய தவிசாளராக ஈழ மக்கள் ஜனநாயகக்...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார். இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள்...
Loading posts...
All posts loaded
No more posts
